காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பூவித்தா இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 497 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்தார். அவர் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக ஆசிரியரணி தலைவர்
கோ. திருப்பதியால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவி ஆவார். அவர் பணியை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியர் கோ. திருப்பதிக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஊக்கத்தொகை ரூ. 1000த்தை மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட அவர் விடுதலை நாளிதழ், தந்தை பெரியார் அவர்களால் தான், நான் இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறேன். அதை உணர்ந்து, அவர் கொள்கைகளை தொடர்ந்து 90 ஆண்டுகளாக மக்களிடையே கொண்டு சேர்க்கும் விடுதலை நாளிதழுக்கு தன் சார்பில் 10 சந்தாக்களை பெற்று தருகிறேன் என்று உறுதி அளித்தார். அவருக்கு மாவட்ட திராவிடர் கழகம் நன்றி தெரிவித்தது.
ஊக்கத்தொகை
Leave a Comment