உத்தரவு
சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும். அனுமதி பெறப்படாவிட்டால், அதுவரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
உள்கட்டமைப்பு
பாதுகாப்பான சாலைப் போக்குவரத்துக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சென்னை அய்அய்டி-யும் பிகேஎப் சிறீதர் அண்ட் சந்தானம் எல்எல்பி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
தமிழ் முதுகலை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பரவலாக மழை
வங்கக் கடலில் இன்று காலை உருவாகும் இந்தாண்டின் முதல் புயல் ரெமல் நாளை நள்ளிரவு மேற்கு வங்காளக் கடற்கரை அருகே கரையை கடக்கும் என்றும், கேரளாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 5 நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்.