தலைநகர் டில்லியில் வீர தீர செயலில் ஈடுபட்ட குழந்தைகளிடையே, ‘‘நான் கடவுளால் சிறப்பு குணங்களோடு நேரடியாக பூமிக்கு அனுபப்பபட்டவர்” என்று கூறிக்கொள்ளும் பிரதமர் உரையாடினார்.
அவர் பேசும் போது வீரதீரச்செயல்களில் ஈடுபட்டவர்களைப் பற்றி புகழ்ந்து அவர்களது அனுபவங்கள் குறித்துப் பேசாமல் தன்னைப் பற்றியே புகழ்ந்துகொண்டு இருந்தார்.
அதுவும் அறிவியலுக்குப் புறம்பான அருவருக்கத்தக்க தகவல் ஒன்றை குழந்தைகளிடம் பகிர்ந்துகொண்டார்.
ஒருமுறை வெளிநாடு சென்ற போது ஒரு பெரிய தலைவர் அவரிடம் கேட்டாராம், உங்கள் முகம் எப்படி இவ்வாறு பிரகாசமாக இருக்கிறது என்று.
உடனே அதற்கு மோடி பதில் கூறினாராம், ‘‘நான் உழைக்கிறேன், வியர்வை வழிகிறது, அந்த வியர்வையை முகத்தில் பூசிக்கொள்கிறேன். இதை நான் தொடர்ந்து செய்வதால் என்னுடைய முகம் பிரகாசமாக இருக்கிறது” என்று சிறுபிள்ளைத்தனமான காரணத்தைக் கூறினார்.
வியர்வை என்பது மனித உடலில் இருந்து தேவையில்லாமல் வெளியேற்றும் கழிவு ஆகும். எப்படி மலம், சிறுநீர் போன்றவையோ அதுபோலத்தான்.
இதில் சளி, வியர்வை, உமிழ்நீர் போன்றவைகளும் அடங்கும். சில நேரங்களில் மிகவும் மோசமான துர்நாற்றம் வீசும் போது, நாசி மூலம் அந்த நாற்றத்திற்குக் காரணமாக நுண் கிருமிகள் நாசிமற்றும் தொண்டைப்பகுதியில் ஒட்டிக்கொண்டு உடனடியாக அவை உமிழ்நீர் மூலம் வெளியேற்றப்படும்.
அதுபோலத்தான் வியர்வையும் உடல் வெப்பநிலையைச் சமன்படுத்தவும், தோல்பகுதி இடைவெளியில் உள்ள பல்வேறு நுண்கிருமிகளை உடலுக்குள்ளே கொண்டு செல்லாமல் அவற்றை அகற்றும் பணிகளையும் வியர்வைச் செய்கிறது,
இதனால் தான் அதிக வியர்வை துர்நாற்றம் கொண்ட ஒன்றாக மாறுகிறது.
வியர்வை அதிகம் கொண்ட ஆடைகளை நாம் கழற்றிய பிறகு அதை முகர்ந்து பார்த்தால் சிலருக்கு வாந்தி வந்துவிடும்
அப்படி இருக்க பிரதமர் மோடி, எந்த ஒரு அறிவியல் காரணங்களும் இன்றி குழந்தைகளுக்கு, ‘‘வியர்வை வழிந்தால், அதை முகத்தில் பூசிக்கொள்ளுங்கள்” என்று கூறும் வகையில் பேசி இருப்பது பிரதமருக்கு அழகல்ல…..