தஞ்சாவூர், செப். 3 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தஞ்சாவூரில் அளித்த பேட்டி:
ஒன்றிய அரசு அலுவ லகங்களில் 10 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்ட நிதி குறைக்கப்பட்டுள் ளது.
இதனால் வேலை நாள் குறையும் அபாயம் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையில் பன் னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந் தாலும் வரிகளை அதிக மாக போட்டுக்கொண்டே இருப்பதால் அதன் விலை குறையவில்லை.
உணவுப் பொருட் களின் மீது ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பது நியாய மல்ல. கார்ப்பரேட்டுக ளுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ஒன்றிய அரசு வழங்குகிறது. 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒன்றிய அர சுத் திட்டங்களில் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியாகி உள்ளது. இதற்குப் பிரத மர் பதில் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.