புதுடில்லி, மே 24 மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் அனைத்தும் பாஜகவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. பணம் மற்றும் மிரட்டலால் பாஜக வின் அய்டி விங் போல மாறியுள்ள “கோடி மீடியா” ஊடகங்கள், மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல்களை மட்டுமே ஒளி பரப்பு வேலையைச் செய்கின்றன.
நாட்டின் மிக முக்கிய செய்தி களான பாஜகவின் ஊழல், மங்கும் நிலைமையில் உள்ள மக்களின் வாழ் வாதார நிலை, “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் பேச்சுக்கள் மற்றும் நிகழ்வுகளை “கோடி மீடியா” ஊட கங்கள் ஒளிபரப்புவது கிடையாது. குறிப்பாக வடமாநிலங்களில் “கோடி மீடியா” ஊடகங்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ள சூழலில், இதனை துருவ் ரதி என்ற அரசியல், சுற்றுச் சூழல் ஆர்வலர் தனது உண்மை சரிபார்ப்பு நிகழ்வு மற்றும் ஆய்வு மூலமாக மோடி அரசை அம்பலப் படுத்தி வருகிறார்.
அரியானா மாநிலம் ரோக்தக் கைச் சேர்ந்த துருவ் ரதி (வயது 29) அய்ரோப்பிய நாடான ஜெர்மனியில் கார்ல்ஸ்ரூ இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் படித்த பின்பு அங்கேயே தங்கி யூடியூப் மற்றும் சமூகவலைத்தளங்கள் அர சியல், சமூக நலன் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகிறார். விவசாயிகளின் இரண்டாம் கட்டப் போராட்டம் முதல் மோடி அரசின் ஊழல், அரசியல் சதி, இந்து – முஸ் லிம் மக்களிடையே வன்முறை கிளப்பும் பாஜகவின் திட்டம் என அனைத்தையும் தொடர்ந்து அம் பலப்படுத்தி வருகிறார். இதனால் அவருக்கு மிரட்டல்கள் பல வந் தாலும் மோடி அரசின் செயல்பாடு களை எவ்வித பயமுமின்றி விமர் சித்து வருகிறார். இவர் வெளியிடும் ஒவ்வொரு செய்தி தொகுப்பும் யூடியூப், சமூகவலைத்தளங்களில் மட்டுமின்றி “கோடி மீடியா” சாராத ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வலம் வருகிறது. மிக முக்கியமாக மோடியை ஆட்சி அதி காரத்தில் இருந்து அகற்ற 40-க்கும் மேற் பட்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ள “இந் தியா” கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதால், துருவ் ரதியை கண் டாலே பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் அஞ்சுகின்றனர்.
மோடி – பாஜகவினருக்கெல்லாம் பயப்படமாட்டேன்
இதனால் துருவ் ரதியை ஒடுக்க பாஜக, மிரட்டல் மற்றும் போலிக் கருத்துகள் மூலம் பல்வேறு வியூகம் வகுத்து வருகிறது. ஆனால் அனைத் தையும் துருவ் ரதி தனது அடுத்தகட்ட ஆய்வின் மூலம் சுக்குநூறாக நொறுக்கி வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்,”பணம் சம்பாதிக்க நினைத்தால் பாஜகவில் இணைந்து இருப்பேன். ஆனால் நாட்டைப் பாதுகாக்க வந்தவன். என்னை மிரட்டல், சித்து வேலை களின் மூலம் பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது. மோடி – பாஜகவின ருக்கெல்லாம் பயப்பட மாட்டேன்” என மோடி மற்றும் பாஜகவினருக்கு சவால் விட்டார். இதனால் பாஜக தனது முக்கிய வேலையான பொய் பிரச்சாரங்கள் மூலம் துருவ் ரதியை மனநலம் பாதிக்கப் பட்டவர் போன்ற சாயலை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது.
இதுதொடர் பாக பாஜக அய்டி விங் பொறுப்பாளர் பேசிய காட்சிப் பதிவும் வெளியாகியுள்ளது.
‘மோடி பெயரில் புதிய மதத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்’
பிரதமர் மோடியின் “நான் கட வுள்” பேச்சிற்கு துருவ் ரதி கூறுகை யில், “உங்களுக்கு (பாஜக) மோடியை கடவுளாக பாவிக்க வேண்டுமென் றால், “மோடி பந்த்” என்ற பெயரில் புதிய மதத்தை உருவாக்கிக் கொள் ளுங்கள். ஏன் ஹிந்து மதத்தை இழிவுபடுத்துகிறீர்கள்?” என கூறி யுள்ளார். துருவ் ரதியின் இந்த பேச்சு வைரலாகி வரும் நிலையில், தங் களது ஹிந்துத்துவா பின்புலத்திற்கு எதாவது பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற அச்சத்தில் பாஜகவினர் நிலை குலைந்துள்ளனர்.