காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில்
மீண்டும் வடகலை- தென்கலை மோதல்!
காஞ்சிபுரம், மே 24 108 வைணவ திவ்ய தேசங் களில் ஒன்றாக பக்தர்கள் கூறும் காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் வட கலை மற்றும் தென் கலை ஆகிய இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடையே வேதபாராயணம் மற்றும் ஸ்தோத்திர பாடல்கள் பாடுவதில் நீண்ட காலமாக பிரச்சினை நிலவி வருகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை யும் நடைபெற்று வரு கிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் வரத ராஜர் கோவிலில் தற்போது வைகாசி பிரம்மோற்சவம் எனப்படும் விழா கடந்த 4 நாள்களாக நடைபெற்று வரு கிறது. இந்த விழாவில் கோஷ்டி மோதல் நடைபெறக் கூடாது என்பதற்காக இரு பிரிவினருமே வேதபாராயணம் மற்றும் திவ்யபிரபந்தம் பாடக்கூடாது என கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வைகாசி பிரம்மோற்சவத்தை யொட்டி முக்கிய நிகழ்வாக வரதராஜ பெருமாள் சிலை வீதி உலா வந்து கங்கைகொண்டான் மண்டபத்தில் வைக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மந்திர புஷ்பம் எனப்படும் பாடலை பாடி வழிபாடு செய்வது வழக் கம். அந்த வழிபாட்டின்போது தென் கலை பிரிவினர் இடையூறு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் நேற்று (23.5.2024) நடை பெற்ற நாக வாகன உலாவின்போது வடகலை மற்றும் தென்கலை பிரிவி னருக்கிடையே மீண்டும் பிரச்சினை வெடித்தது. அப்போது காவல் துறை யினர் அங்கே வந்து இரு தரப்பினரி டமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நாள்தோறும் இத்தகைய பிரச்சினைகள் நடந்து வருவதால், இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் நீதிமன்றம் தலையிட்டு இதற்குத் தீர்வு காணவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.