சென்னை, மே 23 தமிழ்நாடு அரசு சோதனை முறையில் மகளிர் குழுக்கள் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடை தையல் பணியை வழங்க உள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தையல் பணிகள் மேற்கொள்ளும் மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 50 பள்ளிகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன்பின்னர் அனைத்து பள்ளிகளுக்கும் மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சீருடையின் அளவில் மாறுபாடு இருப்பதால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, ஒவ்வொரு 50 பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தனித்தனியாக அளவு எடுத்து, மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இத்திட்டம் வெற்றி பெற்றால் 37 லட்சம் மாணவர்களுக்கான சீருடைகளை தைத்து கொடுக்கும் பணி பெண் தையலர்களுக்கு கிடைக்கும். தமிழ்நாடு அரசு பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
மகளிர் குழுக்கள் மூலம் பள்ளி மாணவர் சீருடை தையல் பணி
Leave a Comment