தீவிர ஹிந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ் (ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம்) அமைப்பின் கீழ் பல்வேறு அமைப்புகள் உள்ள நிலையில், அந்த அமைப்பின் கீழ் உள்ள அரசியல் கட்சியே பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆகும். பாஜக நாட்டையே ஆட்சி செய்தாலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உத்தரவின் படியே அக்கட்சியின் செயல்பாடு இருக்க வேண்டும். பாஜக ஆட்சி அமைத்தால் பிரதமர், ஒன்றிய அமைச்சர், ஆளுநர், மாநில முதலமைச்சர், எம்பி, எம்எல்ஏ என அனைத்து உறுப்பினர்களையும் தேர்வு செய்வது ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான். பாஜக வெறும் லெட்டர்பேடு அறி விப்பை மட்டுமே வெளியிடும். இவ்வாறு பாஜகவின் முழுசெயல்பாடும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் சூழலில், திடீரென பாஜக – ஆர்எஸ்எஸ் உறவின் விரிசல் தீவிரமடைந்து உள்ளது.
ஜே.பி.நட்டா மூலம் காய் நகர்த்திய மோடி – அமித்ஷா
ஆட்சி மற்றும் பாஜகவின் கட்டுப்பாடு என அனைத்தும் மோடி, அமித்ஷா கூட்டணியின் கையில் உள்ளது. மேலும் மோடி, அமித்ஷாவின் நம்பிக்கைக்கு உரியவராக உள்ள ஜே.பி.நட்டா பாஜக தேசிய தலைவராக உள்ள நிலையில், எல்லாமே மோடி, அமித்ஷா கூட்டணியிடம் இருப்பதால், பாஜக மூத்த தலைவர்களும், ஒன்றிய அமைச்சர்களுமான ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால் ஆர்எஸ்எஸ் அமைப்பு மோடி, அமித்ஷாவிடம் சில உத்தரவுகளை பிறப்பித் துள்ளதாகவும், அந்த உத்தரவுகள் மோடி, அமித்ஷாவை ஓரங்கட்டுவது போன்று இருந்த தாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே மோடி – அமித்ஷா ஆர்எஸ்எஸ் தலைமையுடனான இடைவெளியைக் குறைக்கத் தொடங்கினர். தற்பொழுது வெளிப்படை யாகவே ஜே.பி.நட்டா மூலம் ஆர்எஸ்எஸ் அமைப் புக்கு எதிரான கருத்தை மோடி, அமித்ஷா கூற வைத்து பாஜக – ஆர்எஸ்எஸ் இடையேயான விரிசலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். உதவி பாஜகவிற்கு தேவையில்லை
தற்போது மோடி – அமித்ஷா கொடுத்த திரைக் கதையை பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஊடகங்கள் வழியாக பேசியதன் மூலம், பாஜக – ஆர்எஸ்எஸ் உறவில் விரிசல் தீவிரமடைந்து வருவது நிரூபணமாகியுள்ளது. 3 நாட்களுக்கு முன் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு ஜே.பி. நட்டா அளித்த பேட்டியில், “ஆர்எஸ்எஸ் ஒரு “சித்தாந்த முன்னணி”. அந்த அமைப்பு அதன் சொந்த வேலையை மட்டுமே செய்கிறது. ஆர்எஸ்எஸ் உதவி தேவைப்பட்ட காலத்தில் இருந்தே பாஜக கட்சி வளர்ச்சியடைந்து தற்போது “சாக்ஷம்” (திறன்) மற்றும் அதன் சொந்த காரியங்களை நிகழ்த்தும் அளவிற்கு வளர்ந்து விட்டது. இதனால் பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் உதவி தேவையில்லை” எனக் கூறினார்.
மதுரா, காசியில் கோவில்கள் கட்டும் திட்டம் இல்லை
பிரச்சினைக்குரிய இடங்களான உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் உள்ள மசூதி இடத்தில் கிருஷ்ணன் கோவிலையும், வாரணாசியில் ஞான வாபி மசூதி இருக்கும் இடத்தை காசி விஸ்வநாதர் இந்து கோவிலுடன் இணைக்க ஆர்எஸ்எஸ் தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதற்கு ஒன்றிய மற் றும் மாநில பாஜக அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வரு வது நாடறிந்த விஷயம் என்ற நிலையில்,”மதுரா மற்றும் வார ணாசியில் கோவில்கள் அமைக்க பாஜகவிடம் எந்த திட்டமும் இல்லை. பாஜக விடம் அப்படியொரு யோசனையோ, விருப்பமோ இல்லை” என ஜே.பி.நட்டா கூறினார். ஜே.பி.நட்டாவின் கருத்து ஆர்எஸ்எஸ் அமைப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு பல்வேறு செயல்பாடுகளால் ஆர்எஸ்எஸ் – பாஜக அமைப்பின் உறவு சுக்குநூறாக நொறுங்கும் நிலையில் உள்ள சூழலில்,”பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்துவிடும்” என மகாராஷ்டிரா முன்னாள் முதல் வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே பற்ற வைத்த நெருப்பு வேறு சங்பரிவார் கூட்டத் துக்குள் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
பிரதமர் மோடி – அமித்ஷாவின் சர்வாதிகாரத்தால் நாட்டு மக்கள் மட்டுமின்றி, பாஜகவின் தாய் அமைப் பான ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.