கரூர்,செப்.4-கரூர் மாவட்டம் புஞ்சை புகலூர் தவுட்டுப்பாளை யத்தில் வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா! சேரன்மாதேவி குருகுலம் போராட்ட நூற்றாண்டு! விழா கலைஞர் நூற்றாண்டு விழா! திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க தெருமுனை கூட்டம்! டிடி குமார் நினைவு மேடையில் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் கரூர் ஒன்றிய திரா விடர் கழக தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றன. கூட் டத்திற்கு வந்திருந்த அனைவரை யும் கரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் குமாரசாமி வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஆசிரியர் மதுரை சுப. பெரியார் பித்தன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றன.
சாமியார்களின் பித்தலாட் டங்கள் பொதுமக்களின் அறியா மையை பயன்படுத்தி மாயாஜால வித்தைகளை தோலுரித்துக் காட் டும் விதமாக எல்லாம் மந்திரம் அல்ல – தந்திரமே என்று பொது மக்களிடம் விலக்கிப் பேசி செய்து காட்டினார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாக திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி திராவிட இயக்க வரலாற்றுப் பற்றியும், வைக்கம் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு, தந்தை பெரியாரின் பெண் உரிமை சம வாய்ப்பு பற்றி யும், கலைஞர் கொண்டு வந்த பெண்களுக்கு சொத்துரிமை இலவச கல்வி பற்றியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த ‘நான் முதல்வன் திட்டம்‘, இலவச பேருந்து பயணம், இல்லந்தோறும் கல்வி, நூலகம் பற்றி திராவிட மாடல் ஆட்சி சாதனை குறித்து விளக்கமாக பேசினார்.
நிகழ்ச்சியில் புஞ்சை புகலூர் நகராட்சி தலைவர் நகர திமுக செயலாளர் எ, சேகர் (என்கிற) குணசேகரன், திமுக ஆட்சியின் திராவிட மாடல் ஆட்சி சாதனை குறித்து பொதுமக்களிடம் விரி வாக பேசினார்.
நிகழ்ச்சியில் தவிட்டுப்பாளை யம் மொழி போர்த்தியாகி கிருட் டினன், விஜயகுமார், கருணாநிதி, திமுக மாவட்ட பிரதிநிதி காவிரி கோவிந்த ராசு, திமுக மேனாள் செயலாளர் கட்டி பாளையம், ஆர். வைஜெயந்தி, கரூர் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் புஞ்சை புகலூர் நகராட்சி ஆறாவது வார்டு உறுப்பினர் ஆர் தங்கராஜ், திமுக செயலாளர் மூன்றாவது வார்டு மோதுகாடு, சிலம்பரசன், திமுக செயலாளர் ஏழாவது வார்டு தவுட்டுப்பாளை யம் செந்தில், திமுக செயலாளர் எட்டாவது வார்டு தவிட்டுப் பாளை யம் வீரமணி, மேனாள் துணைத் தலைவர் புஞ்சை புகலூர் நகராட்சி, தமிழ்ச்செல்வன், இள முருகு, கட்டிபாளையம் மற்றும் திராவிடர் கழகமாவட்டச் செய லாளர் காளிமுத்து, காப்பாளர் வே ராஜு, பொதுக்குழு உறுப்பினர் கட்டளை வைரவன், ம, ஜெக நாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ், மாவட்ட கலை இலக்கிய அணி ராமசாமி, பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பொம்மன், கரூர் ஒன்றிய செயலா ளர் காலனி கிருஷ்ணன், கிருஷ் ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள், கடவூர் ஒன்றிய செய லாளர் கார்த்தி, கரூர் நகர செய லாளர் சதாசிவம், நகர இளை ஞரணிச் செயலாளர் ராஜா, ராஜ்மோகன், ஆகியோர் கலந்து கொண் டனர் நிகழ்ச்சியில் ஜி.சி அக்பர் தலைவர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நன்றியுரை கூறினார்.