புதுடில்லி, மே 22 நாடு முழுவதும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவிற்கு எதிரான அலை தீவிரமடைந்து வருகிறது. பஞ்சாப், அரியானாவில் விவசாயிகளும், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ராஜபுத்திரர் களும், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதி களில் ஜாட் மக்களும், “மோடி”, “பாஜக” வார்த்தைகளை கூறினாலே விரட்டி யடிக்கும் தென்னிந்திய மாநில மக்களும், “வன்முறை சார்ந்த கட்சி” என வட கிழக்கு மாநில மக்களும் என நாடு முழு வதும் மக்களவை தேர்தல் பிரச்சாரத் திற்கு வரும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினரை பொதுமக்கள் விரட்டி யடித்து வருகின்றனர். இதனை மறைக் கவே பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கையாண்டும், தேர்தல் முறைகேடு மற் றும் வன்முறை சம்பவங்களை அரங் கேற்றியும் வருகின்றனர்.
மோடியின் பதிவில் “இந்தியா” கூட்டணிக்கு
ஆதரவு கேட்கும் நிலை
வெறுப்புப் பிரச்சாரத்தை மக்கள் கண்டுகொள்ளாததால் அதற்கு மாற்றாக சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதிக் கம் செலுத்த தொடங்கியது. அதாவது வெளியரங்கு பிரச்சார நிலைமைகளை சரிக்கட்ட சமாளிக்க சமூக வலைத் தளங் களில் பாஜக ஆக்டிவாக செயல்பட தொடங்கியது. ஆனால், அங்கேயும் பாஜகவிற்கு பலத்த சேதாரம் ஏற்பட் டுள்ளது. வெறுப் புப் பேச்சு, சர்வாதிகாரச் செயல்களால் சமூகவலைதள உலகில் மிக முக்கியமானவராகவும், அதிக விருப்பங்களை பெறுபவருமான பிரத மர் மோடியின் முகநூல், டுவிட்டர் எக்ஸ், இன்ஸ்டாகிராம் பதிவு களை நாட்டு மக்கள் கண்டுகொள்வதில்லை. முன்பெல்லாம் பிரதமர் மோடியின் ஒவ்வொரு பதிவும் லட்சக்கணக்கில் விருப்பங்களை பெறும். ஆனால், தற் போது 3000 விருப்பங்களுக்கே திணறும் நிலை உருவாகியுள்ளது.
பிரதமர் மோடி தேர்தல் பிரச்சா ரம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வை யும் உடனுக்கு உடன் முகநூல், டுவிட்டர் எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் பதிவிட்டு வரு கிறார். முன்பெல்லாம் மோடியின் பதிவுகளில் விமர்சனங்களை மூலம் வறுத்தெடுத்த நெட்டிசன்கள், தற் போது புதிய மாற்றாக “இந்தியா” கூட் டணிக்கு வாக்களியுங்கள் என பிரதமர் மோடியின் சமூக வலைதள கணக்கி லேயே கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
மோடியின் சமூகவலைத்தள பதிவு களைத் திறந்தால், அதில், “காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆர்ஜேடி, சிவ சேனா, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சி களுக்கு வாக்களிக்குமாறு கருத்து மழை” பொழிந்து வருகின்றனர். இது பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின ருக்கு கடும் குடைச்சலை கொடுத்துள்ளது.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இளைஞர்கள் அதிகம் விரும்பும் மற்றும் ஆக்டிவாக இருக்கும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத் தளத்தில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ கணக்கில், அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவிலும் “இந்தியா கூட்டணி”ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றெல்லாம் கூறி, “இந்தியா” கூட்ட ணிக்கு வாக்களியுங்கள் என்று கருத்து களைப் பதிவு செய்து வருகின்றனர். இதனால் மோடியின் சமூக வலைத்தள கணக்குகளில் விருப்பங்களை விட கருத்துகளின் எண்ணிக்கை பிரம்மாண் டமாக உள்ளது.
பொதுவெளியில் பிரச்சாரம் மேற் கொண்டால் பொதுமக்கள் விரட்டியடிக் கிறார்கள் என்பதற்காக, பல நூறு கோடி ரூபாயை செலவழித்து மோடி உள்ளிட்ட பாஜகவினர் முகநூல், டுவிட்டர் எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால், வெறும் 299 ரூபாய் டேட்டா ரீசார்ஜ் விலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினரை இளைஞர்கள், நெட்டிசன்கள் பந்தாடி வருகிறார்கள். செல்லுமிடமெல்லாம் அடிமேல் அடி கிடைப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் பாஜகவினர் விழிபிதுங்கி இருக்கின்றனர்.