கொல்கத்தா, மே 21- தேர்தல் நடத்தை விதிகளை மீறி திரிணாமுல் காங்கிரஸ் குறித்து பாஜக சார்பில் அவதூறு விளம்பரங்கள் வெளியிடு வதாக கூறி கொல்கத்தா உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலை யில் இந்த வழக்கு நீதிபதி சப்யசாசி பட்டாச்சார்யா அமர்வில் நேற்று (20.05.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி திரிணாமுல் காங்கிரஸ் குறித்து பாஜக விளம்பரங்கள் வெளியிடக் கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பாஜகவின் விளம் பரங்கள் உள்ளன. பாஜகவுக்கு எதிரான புகார் மீது தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நட வடிக்கைகள் போதுமானதல்ல. விளம்பரம் என்ற போர்வையில் பாஜகவை எதிர்த்து போட்டியிடு பவர்கள் மீது அவதூறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. தேர்தல் விளம் பரங்களின் உண்மைத் தன்மையை உறுதிசெய்யாமல் பத்திரிகைகள் பிர சுரிக்கக்கூடாது. இந்திய பத்திரிகை கவுன்சிலின் வழிகாட்டு நெறிமுறை களுக்கு ஏற்ப பத்திரிகைகள் செயல் பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளைமீறி விளம்பரங்கள் பா.ஜ.க.வுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books