பேராசிரியர் அரசு செல்லையா எழுப தாவது பிறந்த நாள் விழா மேரிலாந்தில்
18.5.2024 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தோழர் குமரன் ஒருங்கிணைத்தார்.
கழக சார்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கலந்து கொண்டு ஆடை போர்த்தி புத்தகம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். முனைவர் பிரபாகரன், மெய் யப்பன், நாஞ்சில் பீட்டர், முத்து செல்லையா, வாழ்விணையர் மீனா செல்லையா, மனோகரன், நளினி, ராஜு மகள்கள் தமிழ் மற்றும் செல்வி மருமகன் சஞ்சீவி, ராகுல், கலைச் செல்வி ,அறிவுப் பொன்னி, எழில் வடிவன், காவியா ஆகியோர் பேராசிரியர் அரசு செல்லையா அவர்களின் தமிழ்த் தொண்டு ,தமிழர் மேம்பாடு, தமிழ் க்கல்விக்கு ஆற்றிய அரும் பணி, பெரியார் கொள்கை பரவலுக்கு உதவும் பணி என அவரின் பன்முக தன்மைகளை பாராட்டி பேசினர் முடிவில் பேராசிரியர் அரசு செல்லையா ஏற்புரை வழங்கினார். குடும்பத்தினர் சார்பில் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க தமிழர்கள் பலரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உடல் நலனை விசாரித்தும், அவரின் அயரா உழைப்பை பாராட்டியும் கருத்தறிவித்தனர்.
திருச்சி பேராசிரியர் அரசு செல்லையா 70ஆவது பிறந்தநாள் விழா! அமெரிக்கா -மேரிலாந்தில் நடந்தது!
Leave a Comment