அமராவதி, மே 21 ஆந்திராவில் நடந்து முடிந்த தேர்தலில் வன்முறை நிகழ்வுகளில் பலர் படுகாயம் அடைந்தனர். சில வேட்பாளர்கள் மீது கொலை வெறி, தாக்குதல் நடத்தப்பட் டது. இது வேண்டுமென்றே செய்த சதி எனவும், வாக்கு இயந் திரங்கள் வைக்கப்பட்ட இடங் களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும், வாக்கு எண்ணிக்கையின் போதும், அதன் பிறகும் கூட ஆந்திராவில் வன்முறை நடக்கலாம் என மேனாள் முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தார். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையம், ஆந்திர மாநிலதலைமை செய லாளர் ஜவஹர் ரெட்டி மற்றும் காவல்துறை தலைமை இயக் குநர் ஹரீஷ்குமார் குப்தா ஆகியோரை அழைத்து நீங்கள் என்ன செய்துகொண்டு இருக் கிறீர்கள்? ஏன் இவ்வளவு அலட் சியம்? உடனடியாக சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுங்கள் என உத்தர விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு அய்ஏஎஸ், 3 அய்பிஎஸ் அதிகாரிகள் மற்றும் 12 காவல்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களில் பலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 2 பேர் இட மாற்றத்துக்கு உள்ளாயினர்.
இதனை தொடர்ந்து அய்பி எஸ் அதிகாரி வினித் ப்ரிஜ்லால் தலைமையிலான ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்கப் பட்டது. ஆந்திராவில் தேர்த லின் போதும், தேர்தலுக்கு பின்னரும் நடந்த வன்முறை நிகழ்வுகள் குறித்து இக்குழு கடந்த 2 நாட்களாக திருப்பதி, அனந்தபூர் மற்றும் பல்நாடு மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்தது. 48 மணி நேர ஆய்வுக்கு பின்னர் நேற்று (20.5.2024) மாலை ஆந்திர மாநில காவல் துறை தலைமை இயக்குநருக்கு 150 பக்க ஆய்வறிக்கையை அந்த குழு வழங்கியது.
மேற்கு வங்கத்தில்
வாக்குப்பதிவின்போது ஒரு சில இடங்களில் மோதல் மற்றும் வன்முறை நிகழ்வுகள் நடந்துள்ளன. ஆயினும் வாக் குப்பதிவு சீரான முறையில் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு, ஏஜெண்டுகளை வாக்குச்சாவடிக்குள் அனும திக்கவில்லை என்பன உள் ளிட்ட 1,036 புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு வந்திருப்பதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் குறிப்பாக அரம்பாக் தொகுதியில் உள்ள கனக்குள் என்ற பகுதியில் பூத் ஏஜெண் டுகளை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கவில்லை எனக்கூறி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மோத லில் ஈடுபட்டனர்.
ஹூக்ளி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் லாக்கெட் , தனது காரில் வாக்குச்சாவடிக்கு சென்று கொண்டிருந்தபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு எதிராக முழக் கங்களை எழுப்பினர். காரை விட்டு இறங்கி வந்த லாக்கெட் பதிலுக்கு அவர்களைப் பார்த்து முழக்கம் எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட் டது. ஹவுரா, போங்கான் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதி களிலும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களி டையே மோதல்க ள் நடந்துள்ளன. ஒரு சில இடங்களில் வாக்காளர் களை பாஜக ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாகவும், அவர் களுக்கு மத்திய பாதுகாப்பு படையினர் ஒத்து ழைப்பு கொடுப்பதாகவும் திரி ணாமுல் காங்கிரஸ் ஆதரவா ளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.