தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு 13.11.1938 அன்று சென்னை ஒற்றைவாடை நாடக அரங்கில் நடைபெற்றது. இம்மாநாடு திராவிட இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மாநாடாகும்.
அன்னை தருமாம்பாள், மலர் முகத்தம்மையார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆகி யோர் மாநாட்டு அமைப் பாளர்கள். மாநாட்டு அலுவலகம் அன்னை தருமாம்பாள் இல்லத்தில் செயல் பட்டது.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் முத லமைச்சர் இராஜாஜியால் ஹிந்தி மொழி, கட்டாயமாகத் திணிக்கப் பட்ட சூழ்நிலையில் இம்மாநாடு நடைபெற்றது. இரண்டாயிரத்துக் கும் மேற்பட்ட பெண்கள் மாநாட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் தமிழ்க் கொடியை அன்னை மீனாம்பாள் சிவராஜ் ஏற்றினார்.
மறைமலை அடிகளாரின் மகள் திருவரங்க நீலாம்பிகை அம்மையார் மாநாட்டுத் தலைவர்; மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் பெயரைச் சொல்லி லும் எழுத்திலும் வழங்கும் போது, இனிமேல் “பெரியார்”, என்றே வழங்க வேண் டும் என்ற தீர்மானம், மிகவும் முக்கி யமானதாகும். அந்தத் தீர்மானம்:
இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலை வர்கள் செய்ய இயலாமற்போன வேலைகளை, இன்று நமது தலை வர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட் டில் அவருக்கு மேலாகவும், சம மாகவும் நினைப்பதற்கு வேறொரு வரும் இல்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும் எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் “பெரியார்” என்ற சிறப்புப் பெயரையே வழங் குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள் கிறது. இந்தத் தீர்மா னத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியதில் பெரும் பங்கு ஆற்றியவர் அந்த மாநாட்டின் அமைப்பாளராக இருந்த அன்னை தருமாம்பாள் ஆவார்.