உரத்தநாடு புதூர் தொழிலதிபர் எம். சுரேஷ் ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000த்தை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினார் (21-05-2024).
கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் குமரிமாவட்ட சமூக சேவகர் மோகன்ராஜ் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை வழங்கினார்.
குமரிமாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு ஆகியோரிடம் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை திமுக அயலக அணி பொறுப்பாளர் பாலூர் தேவா வழங்கினார்.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழான விடுதலைக்கு ஓராண்டு சந்தா வழங்கி சிறப்பித்த பின்னையூர் சண்முகம்,தாராசுரம் பாஸ்கர், உரத்தநாடு.மாதவன், நெடுவை கு.லெனின், ரெ.அன்புச்செல்வன், இரா.இராவணன் ஆகியோர்க்கு நன்றி கூறி மகிழ்ந்தோம்! களப்பணி செயல்வீரர்கள் உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக தலைவர் த.செகநாதன்,பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநில செயலாளர் நா.இராமகிருட்டிணன், கட்டட எழிற்கலை வல்லுனர் ப.பாலகிருட்டிணன்,புலவர் இரா.மோகன்தாசு,வன்னிப் பட்டு செந்தில் பெரியார் நகர் சக்திவேல் உள்ளிட்டோருக்கு பாராட்டுக்கள்.