நீட்டிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 24.5.2024 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தவறானது
கோவேக்சின் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்த பனாரஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தவறானது என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தெரிவித்துள்ளது.
அதிகரிப்பு
இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், செல்போன் சந்தாதாரர் ஒருவர் மாதத்துக்கு சராசரியாக 21.23 ஜி.பி. டேட்டாவை பயன்படுத்தி வருவதாகவும் டிராயின் தலைவர் அனில்குமார் லகோட்டி தெரிவித்துள்ளார்.
சேர்க்கை
சென்னை தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேண்டுகோள்
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு 23ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கோடை வாசஸ்தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சமர்ப்பிக்க…
அரசின் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற மாற்றுத் திறனாளிகள் தங்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தயார் நிலையில்…
தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து வருவதால் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.
சரிபார்ப்பு
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார் நிலைப் பணியில் அடங்கிய விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 28ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.