முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை
சென்னை, மே 21- தமிழ்நாட்டில் பெய்து வரும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் விவசாயிக ளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்து கணக்கெடுப்பு நடத்த முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த பல நாள் களாக வெயிலின் கடுமை, இயல் பைவிட மிக அதிகமாக இருந்தது. பல்வேறு மாவட்டங்களில் வெப் பத்தின் அளவு 100 டிகிரியை சர்வ சாதாரணமாக தாண்டிச் சென் றது. இதனால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். இந்த நிலையில் கடும் வெயிலுடன் அனல் அழுத் தக் காற்றும் சேர்ந்து கொண்டது.
ஆனால் அதன் பின்னர் வெயிலை தணிக்கும் வகையில் தமிழ் நாட்டில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. ஆனால் இந்த கோடைமழை, தென் மாவட்டங் களில் கனமழையாகவும், அதிகன மழையாகவும் பெய்து வருகிறது.
விளைபொருட்கள் நாசம்
கன்னியாகுமரி, நெல்லை, தூத் துக்குடி, தேனி, தென்காசி, விருது நகர் போன்ற தென்மாவட்டங் களும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக் கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்களும் கனமழையை பெற்று வருகின்றன.
அங்கு மேலும் சில நாள்களுக்கு கனமழை முதல் அதிகன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மய்யம் எச்சரித்துள்ளது. 36 மாவட்டங்களில் சராசரியாக 1.02 செ.மீ. அளவுமழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 3.20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் பல இடங் களில் வெள்ளம் ஏற்பட்டது. விவசாயிகளின் விளை பொருட்கள் அழிந்து நாசமாயின.இந்த மழையினால் மனித மற்றும் கால்நடை உயிரிழப்புகள் நேரிட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பெய்து வரும் மழை குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (20.5.2024) தலைமைச் செயலகத்தில் ஆலோ சனை நடத்தினார். அப்போது, மழையில் இருந்து மக்களை பாது காப்பதற்காக அரசு மேற்கொண் டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், டெல்டா மாவட்டங் களில் பயிர்களுக்கு மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இத னால் விவசாயிகள் அடைந்த நஷ்டம் ஆகியவை குறித்தும் ஆலோசித்தார். அதுபற்றிய கணக்கெடுப்பை – நடத்தி, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி ஆலோசனை நடத்தினார்.
மேலும், வரும் நாள்களில் இன்னும் மழை பெய்யக்கூடிய பகுதிகள் எவை? அவற்றின் அளவு எவ்வளவாக இருக்க வாய்ப்புள் ளது? என்பது பற்றியும் உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.