லண்டன் ‘கார்டியன்’ இதழ் படப்பிடிப்பு!
லண்டன்,மே 21- இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘கார்டியன்’ இதழ் அமித் ஷாவிற்கு மக்களை பயமுறுத்துவது பிடிக்கும் எனவும், மோடியின் வலது கரமாக உள்ள அவர் இந்தியாவை எவ் வாறு கொண்டு செல்கிறார் எனவும் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதுல் தேவ் என்பவர்எழுதியுள்ள அந்த கட்டுரையில் மிகப்பெரும் தாதா வாக இருந்த சோராபுதீன் மற்றும் அவரது மனைவியைக் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதி காரிகளுடன் அமித்ஷா தொடர்பில் இருந்தார் எனவும், அவர்களை கடத்தி யது முதல் கொலையான நாள்வரை, கொலையில் தொடர்புடைய காவல் அதி காரி ஒருவருடன் அமித்ஷா தொலைப் பேசியில் தொடர்ந்து உரையாடலில் இருந்துள்ளார் என சி.பி.அய். அளித்த குற்றப் பத்திரிகையையும் அந்தக் கட்டு ரையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அமித்ஷா 40 ஆண்டுகளாக மோடியின் நம்பிக்கைக்குரிய நபராக இருப்பதோடு, மோடியின் வலதுகர மாகவும் அனைத்தையும் கண்காணிக்கும் நபராகவும் உள்ளார். கட்சி உத்தரவுகளை அமல்படுத்தும் நபராகவும், அவரது உத் தரவை அமல்படுத்துவதற்காக ராணுவம் போல அக்கட்சியின் தொண்டர்களும் உள்ளனர். 2014 இல் ஆட்சி அமைத்த வுடன் அவர்மீது இருந்த அனைத்து வழக்குகளையும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என பா.ஜ.க. தள்ளுபடி செய்தது.
மேலும் தீவிர ஹிந்துத்துவா அமைப் பாக உள்ளஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. வின் ஹிந்துத்துவா திட்டங்களை விரிவுபடுத் தியதிலும், இந்திய அரசியல் சூழலை மாற்றியதிலும் அமித்ஷாவின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசை விமர்சிக்கும் அனை வரும் அமித்ஷாவின் அரசியல் செல் வாக்கு மூலம் மிரட்டப்படுகின்றனர் என் றும், அவரால் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என் றும் ‘கார்டியன்’ கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கூட்டணி அமைப்பது, எதிர்க்கட்சி களின் வேட்பாளர்கள், உறுப்பினர்களை விலைக்கு வாங்கி எதிர்க்கட்சியை பல வீனப்படுத்துவது என தந்திரமாகச் செயல்படுவதில் அவர் முக்கிய நபராக உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
கட்சி நிதி!
குறிப்பாக, இதற்கு இரு உதாரணங் களையும் அந்த கட்டுரையில் அதுல் தேவ் குறிப்பிட்டுள்ளார். அதாவது கடந்த 10 ஆண்டுகளில், மோடி 2019 ஆம் ஆண்டு மட்டும் ஒரு முறை செய்தியாளர் சந்திப்பு நடத்தியுள்ளார். அதில் அவரை நோக்கி வந்த கேள்விகள் பலவற்றுக்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அமித் ஷா பக்கம் திருப்பியதையும் அந்த கேள்விகளைஅமித்ஷா கையாண்டு பதில் கொடுத்ததையும் குறிப்பிடுகிறார்.
மற்றொன்று கார்ப்பரேட்டுகளுக்காக அரசுடன் பேரம் பேசும் நபர் ஒருவர், ஒன்றிய அமைச்சர் ஒருவரிடம் அவர் களது கட்சிக்கு நிதி கொடுத்ததாகவும், அப்போது அந்த அமைச்சர் பணத்தில் ஒரு பகுதியை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என எடுத்து வைத்துக் கொண்டதாகவும், சிறிது நேரத்திலேயே அமித்ஷாவிடம் இருந்து அழைப்புவர உடனடியாக அந்த பேரம் பேசும் நபரிடமே பணத்தை கொடுத்து அதையும் கட்சி வங்கிக்கணக்கில் செலுத்தக் கூறிய தாகவும் பெயர் சொல்ல விரும்பாத ஒரு வர் தெரிவித்ததை கட்டுரையில் தேவ் குறிப்பிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறை மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் சூழல் குறித்து பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள் உள்ளிட்டவை கவலைப்படத் துவங்கின. இந்தியாவின் அந்த கவலைகளுக்கு காரணமே அமித்ஷா தான் என்றும் தெரிவித்துள்ளார் கட்டுரையாளர். 2021 ஆம் ஆண்டு ஒரு பிரபல பத்திரிகை நிறுவனம் அமித்ஷாவுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் தனது பத்திரிகையின் முகப்பில் பட்டியலிட்டு இன்னும் இவர் ஏன் சுதந்திரமாக இருக் கிறார் என கேள்வி கேட்டு இருந்தது. இன்று அவ்வாறு எந்த பத்திரிகையாவது கேள்வி கேட்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் பத்திரிகையாளராக இருப்பவரால் ஓர் எல்லைக்கு மேல் பணியாற்ற முடியாது. இதுவரை இந்திய ஊடகங்கள் சந்திக்காத நெருக்கடியை இன்று சந்திக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சில உச்சநீதிமன்ற நீதிபதி களுக்கே உச்சநீதிமன்றத்தில் என்ன நடக் கிறது என தெரிவதில்லை என பதிவு செய்துள்ளார்.