“பா.ஜ.க.வுக்கு தோல்வி உறுதி..” தாமரை சின்னத்திற்கு 8 முறை வாக்களித்த சிறுவன் ஆவேசமாக சாடும் ராகுல்!

2 Min Read

புதுடில்லி, மே 20 உ.பி. மாநி லத்தில் சிறுவன் ஒருவர் 8 முறை பாஜகவுக்கு வாக்களித்த காட்சிப் பதிவை பகிர்ந்த காங்கிரஸின் ராகுல் காந்தி, பாஜக ஏற்கெனவே தனது தோல்வியை ஒப்புக் கொண் டதற்கு இதுவே சாட்சி என விமர்சித்துள்ளார்.
நம் நாட்டில் இந்த முறை ஏழு கட்டங்களாக மக்கள வைத் தேர்தல் நடக்கிறது. இதில் 4ஆம் கட்ட தேர்தல் கடந்த மே 13ஆம் தேதி 96 தொகுதிகளுக்கு நடை பெற்றது.
8 முறை பாஜகவுக்கு வாக்கு: அப்போது உத்தரப் பிரதேசம் ஃபரூகாபாத் மக்களவைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் சிறுவன் ஒருவரே 8 முறை பாஜகவுக்கு வாக் களித்துள்ளார். இது தொடர் பான காட்சிப் பதிவை அவனே எடுத்துள்ள வெளியிட்ட நிலையில், அது இணையத்தில் பரவி வருகிறது. இந்த காட்சிப் பதிவு இணை யத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்வு குறித்த காட்சிப் பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, இதில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அகிலேஷ் : இதற்கிடையே இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகி லேஷ் காட்டமாக விமர்சித் துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத் தில், “இது தவறு என்று தேர்தல் ஆணையம் கருதினால், நட வடிக்கை எடுக்க வேண்டும்.. இல்லையெனில் பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் லூட் (கொள்ளை) கமிட்டி போலத் தான் நடந்து கொள் ளும்” என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி: அதேபோல அகிலேஷ் யாதவின் ட்வீட்டை ரிட்வீட் செய்து காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் இந்த நிகழ்வில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டரில், “இந்தத் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதை பாஜக உணர்ந்துவிட்டது. இதனால் அரசு இயந்திரத்திற்கு அழுத் தம் கொடுத்து ஜனநாயகத்தை நாசம் செய்ய பாஜக நினைக் கிறது.

தேர்தல் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும், அதிகார அழுத்தத்திற்குப் பணிந்து அரசியல் சாசனப் பொறுப்பை மறந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. இந்தியா கூட்டணி அரசு அமைந் தவுடன், அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் முன் யாராக இருந்தாலும் 10 முறை யோசிக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

நடவடிக்கை: இந்த காட்சிப் பதிவு இணையத்தில் ட்ரெண்டான நிலையில், இந்தச் நிகழ்வு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து உத்தரப் பிரதேச தேர்தல் ஆணையர் தனது ட்விட்டரில், “இந்த காட்சிப் பதிவு எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கச் சம்பந்தப்பட்ட தேர் தல் அதிகாரிக்கு உத்தரவிடப் பட்டுள்ளது” என்று கூறி யுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *