புதுடில்லி, மே 20- இந்தியா முழுவதும் தேர் தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு தற்போது வரை ரூ.8,890 கோடியை எட்டியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித் திருக்கிறது.
இவற்றில் 45% போதைப் பொருட்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவற்றின் மதிப்பு ரூ.3958 கோடியாகும்.
குஜராத்தில் ரூ.1187.80 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும், ராஜஸ்தானில் ரூ.1133.82 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும், பஞ்சாப்பில் ரூ.734.54 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட் டிருக்கின்றன.
அதிகபட்சமானது குஜராத்தில் மொத்தம் ரூ.1,461-க்கு ரொக்கமும், பொருட்களும் கைப் பற்றப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப் பட்ட ரூ.8,889 கோடியில் ரூ.849.15 கோடி பணம் ரொக்கமாக கைப்பற்றப் பட்டது.
5.39 கோடி லிட்டர் மதிப்பிலான மது பானங்கள் கைப்பற்றப் பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.814 கோடி யாகும். ரூ.1260.33 கோடி மதிப்பிலான தங்கள், வெள்ளி, வைரம் போன்ற பொருட்கள் கைப்பற்றப் பட்டன.
ரூ.2006.56 கோடி பதிப்பில் பொது மக் களுக்கு விநியோகிக்க இருந்த இலவச பொருட் கள் பறிமுதல் செய் யப்பட்டன. 75 ஆண்டுக் கால இந்திய வரலாற்றில் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்.