பெங்களூரு, நவ.20 கருநாடகாவில் கடந்த மே 10 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று பாஜகவை தென்னிந் தியாவில் இருந்து துரத்தியது. காங்கிரஸ் மூத்த தலைவர்களான சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே. சிவகுமார் துணை முதலமைச் சராகவும் தேர்ந்தெடுக்கப்பட் டனர்.
ஆனால் தேர்தல் முடிந்து 7 மாத காலம் ஆன பின்பும் பாஜக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல் இருந்தது. இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கருநாடகாவின் புதிய பாஜக தலைவராக நியமிக் கப்பட்ட விஜயேந்திரா (முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் வாரிசு) தலைமையில் சனியன்று மாலை பெங்களூரு விட்டல் மல்லையா சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பத்மநாபநகர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.அசோக் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்.அசோக் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த மிக முக்கிய தலைவர்களான விஜயபுரா எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால், கோகாக் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஜார்கிஹோலி, அரபாவி சட்டமன்ற உறுப்பினர் பாலச்சந்திர ஜார்கிஹோலி, மங்க ளூரு தெற்கு எம்எல்ஏ வேதவியாஸ் காமத், யஷ்வந்த்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்டி சோமசேகர், எல் லப்பூர் சட்டமன்ற உறுப்பினர்சிவராம் ஹெப்பர் ஆகிய 6 பேர் கூட்டத்தை புறக்கணித்தனர்.
ஆர்.அசோக் எதிர்க் கட்சி தலைவர் என்ற பேச்சு அடிபட்டதும், கூட்டம் தொடங்கும் முன்பே வெளியேறினர். இந்த விவகாரத்தால் கருநாடாக பாஜகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், அதிருப்தி 6 சட்டமன்ற உறுப்பினர் களில் சிலர் காங்கிரஸ் கட்சியில் இணைய வுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.