20.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* உ.பியில் ஒரு இடத்தில் தான் பாஜக வெல்லும், அலகாபாத் தேர்தல் பரப்புரையில் ராகுல் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் கடிதம்.
தி டெலிகிராப்:
* இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பின்மை விகிதத்திற்கு நரேந்திர மோடி அரசாங்கத்தை குற்றம் சாட்டும் இளைஞர்கள், வெளி நாடுகளுக்கு கள்ளத்தனமாக செல்வது அதிகரித்து உள்ளதாக அரியானாவில் மக்கள் கவலை.
தி இந்து:
* பணவீக்கம், வேலையின்மை ஆகியவை கிழக்கு உ.பி.யில் பாஜகவுக்கு எதிராக உள்ளது. மோடியின் பிம்பம் இறங்குமுகத்தில் உள்ளதாக கவலை.
* பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் தரும் மகாலட்சுமி திட்டத்தை விளம்பரப்படுத்த காங்கிரஸ் 40 லட்சம் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க உள்ளது
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment