புதுடில்லி, மே 19 இலவச பேருந்து பயண திட்டத்தை பிரதமர் விமர் சித்திருப்பது ஏன் என்று டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி யுள்ளார்.
பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் முதன் முதலில் தமிழ்நாட்டில் முதல மைச் சர் மு.க.ஸ்டாலினால் தொடங் கப்பட்டது. வேலைக்கு செல்லும் பெண்களை ஊக்குவிக்கவும், அவர் களின் மாதாந்திர சேமிப்பை அதிகரிக்கவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எதிர்பார்த்த அளவுக்கு கை மேல் பலனை கொடுத்திருக்கிறது.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டம் குறித்து விமர்சித்து பேசியிருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. அதாவது, “தேர்தலுக்காக மாநில அரசின் கஜானாவை காலி செய்யும் உரிமை அரசியல் கட்சிகளுக்கு இல்லை. நீங்கள் ஒரு நகரத்தில் மெட்ரோவைக் கட்டுகிறீர்கள், பின்பு, அதே நகரத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை வாக் குறுதியளிக்கிறீர்கள். இதனால், மெட்ரோ பயணிகளில் 50 சதவிகி தம் பேரை நீங்கள் வெளியே எடுக்கிறீர்கள்” என்று கூறியிருந்தார்.
இவரது கருத்துக்கு எதிர்க் கட்சித் தலைவர்கள் கடும் விமர் சனம் தெரிவித்திருந்தனர். “பிரதமர் பேசுவதைக் கவனித்தால் “உண்மை கிலோ என்ன விலை?” என்று கேட்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், 2019-இல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-இல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறைய வில்லை.
சென்னை மெட்ரோ இரண் டாம் கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக்கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின் மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார். பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்ற அய்யம் தோன்று கிறது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
இதனை தொடர்ந்து டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். “டில்லியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குவதை பிரதமர் வெளிப்படையாக எதிர்க் கிறார். நாடு முழுவதும் இலவச பேருந்து பயணங்கள் அறிமுகப் படுத்தப்பட வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். பிரத மரும் அவரது அமைச்சர்கள் இலவச விமானப் பயணத்தைப் பெற முடியும் என்றால், ஏன் நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்க முடியாது?” என்று தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பி யுள்ளார்.