மன்னார்குடி, மே 19 ‘விடுதலை’ சந்தா 150 வழங்குவது என மன்னார்குடி மாவட்டக் கலந் துரையாடல்கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.
கடந்த 17.4.2024 அன்று மாலை 6 மணி அளவில் மன்னார்குடி தந்தை பெரியார் படிப்பகத்தில் மன்னார் குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் திராவிடர்கழக ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமை யேற்றார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் முனை வர்அதிரடி க.அன்பழ கன், பகுத்தறிவாளர்கழக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 91 வயதிலும் சோர்வின்றி ஆற்றிய சுற்றுப் பயணங்கள், களப்பணிகள் பற்றியும் அதன் பிறகு அறிவித்த குடிஅரசு நூற்றாண்டு விழாவினுடைய சிறப்புகள் பற்றியும், தொடர்ச்சியாக மாவட்ட முழுவதும் குடிஅரசு நூற் றாண்டு விழாவினை நடத்த வேண்டும் ஏன் என்பதனை விளக்கி சிறப்புடன் விரிவாக எடுத்துக் கூறினார். ஆசிரி யர் அவர்கள் விரும்பக்கூடிய, அவர் ஆயுளை நீட்டிக்க கூடிய தமிழர்களின் கேடயமாம் ‘விடுதலை’ ஏட்டிற்கு அதிக சந்தாக்களைச் சேர்க்க வேண்டும் ஏன்? அதனு டைய அவசி யம் என்ன என்பதினை பற்றியும், பட்டித் தொட்டி எங்கும் ‘விடுதலை’ சென்று சேர வேண்டிய தேவைகளைப் பற்றியும் மிகச் சிறப்பான முறையில் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து பேசிய கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன் ‘விடுதலை’ சந்தாக் களை எப்படி வசூல் செய்வது என்று விளக்கிக் கூறினார்கள்.
அதன் பின்னர் ஊடகத் துறையினுடைய மாநில தலைவர் மா.அழகிரிசாமி ஊடகத்தினு டைய வலிமை பற்றியும், திராவிடர்கழக தோழர்கள் அதில் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதனை பற்றியும் அழகாக எடுத்துக்கூறி சமூக வலைதளத்தில் எப்படிச் செயல்படுவது பற்றிய பவர் பாயிண்ட் விளக்கத் துடன் செயல் விளக்கவுரை ஆற்றினார்கள்.
மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த் தன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள். கழக மாவட்டச் செயலாளர் கோ.கணேசன் வரவேற்புரை ஆற்றினார்கள். திராவிடர்கழக பேச்சாளர்கள் இராம.அன்பழகன், வழக் குரைஞர் சு.சிங்காரவேலு, திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் ந.இன்பக்கடல், மாவட்ட துணைச் செயலாளர் வீ.புட்பநாதன், மன்னார்குடி ஒன்றியத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர் கழக மன்னை நகரத் தலைவர் கோவி.அழகிரி பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டச் செயலாளர் இரா.கோபால், மன்னை நகரத் தலைவர் ஷி.ழி.உத்திராபதி திராவிடர் கழக இளைஞரணி மேனாள் மாவட்டத் தலைவர் மன்னை.சித்து, நகர இளைஞரணி தலைவர் மா.மணி கண்டன், மன்னை நகர துணைத் தலைவர் வே.அழ கேசன், பகுத்தறிவாளர் கழகத் தோழர் வா.காமராஜ், கோட்டூர் ஒன்றியத் தலைவர் சி.இராமலிங்கம், எட மேலையூர் நா.லட்சு மணன், பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.முரளிதரன், கோட்டூர் ஒன்றியச் செயலாளர் எம்.பி.குமார் மன்னை இளைஞரணி ஒன்றிய செயலாளர் பி.இளங்கோவன், ஒன்றிய துணைச் செயலாளர், கோ.செல்வம், மன்னார் குடி கழக தோழர் சிவா.வணங்காமுடி, பகுத் தறிவாளர் கழக தோழர்
ச.அறிவானந்தம், பூவனூர் திராவிடர் கழக தோழர் இரா.சந் திரசேகரன், திராவிட தொழிலாளரணி மாவட் டத் தலைவர் மதிரவி, மன்னார்குடி சம்பத், கதிரவன், நீடாமங்கலம் ஒன்றியத்தலைவர் தங்க.பிச்சைக்கண்ணு, நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் ச.அய்யப்பன், நீடா மங்கலம் நகரத் தலைவர் வா. சரவணன், நீடாமங்கலம் இளைஞரணி நகரத்தலைவர் இரா.அய்யப்பன், நீடா மங்கலம் ஒன்றிய துணைத் தலைவர் பி.வீராச்சாமி, சோத்திரை இளைஞரணி தோழர் சாருகான். தஞ்சை மாவட்ட துணை செயலாளர் உரத்தநாடு உத்திராபதி, தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் மற்றும் பலர் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம்: 1 திருப்பலாக்குடி கோவிந்தராஜ் அவர் களின் துணைவியார் செந்தாமரை மறைவிற்கும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் எம்.செல்வராஜ் அவர்கள் மறைவிற்கும், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் நல்.ராமச்சந்திரன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம் ஆகி யோரின் சகோதரரும் புலவன்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மாநல்.மெய்காப்பன் ஆகி யோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம்.2 உலகின் ஒரே பகுத்தறிவு ஏடான ‘விடுதலை’ ஏட்டிற்கு சந்தா சேர்க்கும் பணியில் மன் னார்குடி கழக மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட இலக் கினை அடைவதற்கு திரா விடர்கழக, பகுத்தறிவாளர் கழக , மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் இணைந்து செயலாற்றி மாவட்டத்திற்கு ஒதுக் கப்பட்ட சந்தாவினை பெருவாரியாகத் திரட்டி வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 3 குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு விழாவினை மன்னார்குடி மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, கிளைக் கழகங்கள் முழுவதும் இந்த ஆண்டு முழு வதும் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.