19.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ மாநிலங்களுக்கு இடையே மோதலை தூண்டும் மோடி பாஜகவின் பிளவுவாத கனவு பலிக்காது: முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை; பெண்களின் முன் னேற்றத்தை கண்டு அஞ்சுகிறார் என்றும் சாடல்.
♦ பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரதமர் மோடியின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது, கருநாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்.
♦ மகாராட்டிராவில் 48 இடங்களில் 46 இடங்களை இந்தியா கூட்டணி வெல்லும், மல்லிகார்ஜூனா கார்கே நம்பிக்கை.
♦ ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் பாஜக தலைமை அலுவலகம் முன்பு மறியல் செய்திடுவேன்; யாரை வேண்டுமானாலும் மோடி கைது செய்யட்டும், அரவிந்த் கெஜ்ரிவால் அறைகூவல்.
♦ இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பாஜக கூட்டணி 200 இடங்களைத் தாண்டாது, மம்தா உறுதி.
♦ உ.பி. ரேபரேலி தொகுதி நாட்டிற்கு வழி காட்டட்டும், ராகுல் பேச்சு.
♦ இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பினை ஒழுங்குபடுத்திடுவோம், மல்லிகார்ஜூனா கார்கே வாக்குறுதி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ தன்னுடன் நேரடி விவாதத்துக்கு பிரதமர் மோடி வர மாட்டார். அதானி குறித்த கேள்விகளுக்கு அவர் பதில் தர முடியாது என தெரியும் – ராகுல் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ மக்களவைத் தேர்தல்: ரூ.8,889 கோடியை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது; போதை மருந்துகள் 45% பங்களிக்கின்றன. குஜராத் முதலிடம்.
தி டெலிகிராப்:
♦ நரேந்திர மோடியின் ‘புல்டோசர்’ கருத்துகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்.
தி இந்து:
♦ மோடியின் முஸ்லீம் பிரச்சார உரை, பீகாரில் பா.ஜ.க.வின் பஸ்மாண்டா முஸ்லீம் மக்களை ஈர்க்கும் பிரச்சாரம் பாதிப்பு. பாஜக தலைவர்கள் கவலை..
– குடந்தை கருணா