இந்தியப்பகுதியை சீனாவிற்கு தூக்கிக்கொடுத்தவர் மோடி மேனாள் வெளியுறவுத்துறை செயலாளர் பேட்டி

1 Min Read

புதுடில்லி, மே 19 இந்தியா- சீனா எல்லையில் சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டும் திடீரென இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். இந்திய எல்லைக்குள் புகுந்த அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

அப்போது இருதரப்பு வீரர்களுக் கிடையில் கடும் சண்டை நடை பெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் அதிக இழப்பு ஏற்பட்டது. அதன்பின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் கட்டமைப்புகளை வலுப் படுத்தியது.
கல்வான் பள்ளத்தாக்கில் பல சதுர கிலோ மீட்டர் வரையிலான இந்தியப் பகுதியை சீனா ஆக்கிர மித்ததாக இந்திய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், ஒரு அங்குல நிலம் கூட சீன ராணுவத்தால் ஆக்கிரமிக்கப் படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடி தெரிவித்ததை சீன பத்திரிகைள் பெரிய அளவில் செய்தியாக வெளியிட்டன. இந்திய பிரதமர் எந்தவித எதிர்ப்பும் இன்றி இந்திய நிலத்தை தாரைவார்த்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர் சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் மேனாள் வெளி யுறவுத்துறை செயலாளர் சியாம் சரண், எந்தவித போராட்டமுமின்றி இந்திய நிலத்தை தாரைவார்த்து விட்டடதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசிய தாக கேரள மாநில காங்கிரஸ் டுவிட் டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி யில் கூறியிருப்பதாவது:-
2013 இல் சீனா இந்தியாவின் 640 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்தது. உடனடி பதிலடியாக எல்லையின் மற்றொரு பகுதியில் நாம் சீனாவின் இடத்தை ஆக்கிரமித் தோம். இதனால் சீனா பேச்சுவார்த் தைக்கு முன்வந்தது.

அப்போது இரு தரப்பிலும் தங் களது பழைய இடத்திற்கு திரும்பிச் செல்ல ஒப்புக் கொள்ளப்பட்டது. எந்தவித போராட்டமும் இன்றி 4067 சதுர கிலோ மீட்டர் இந்திய நிலத் தைப் பிரதமர் மோடி சீனாவுக்கு தாரைவார்த்துவிட்டார்.
இவ்வாறு மேனாள் வெளியுறவுத் துறை செயலாளர் சியாம் சரண் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *