ரேபரேலி, மே 18 தான் விரும்புபவற்றை எல் லாம் பிரதமர் மோடியை பேசவைக்க முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ரேபரேலி தொகு திக்கு வரும் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகு தியில் நேற்று (மே 17) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் பேசியதாவது:
நான் என்னவெல் லாம் விரும்புகிறேனோ பிரதமரை அதை என் னால் பேசச் செய்ய முடி யும். அதானி – அம்பானி யின் பெயரை நரேந்திர மோடி உச்சரிக்கவே மாட்டார் என்று பேசி னேன். அடுத்த இரண்டு நாட்களில் அதானி – அம்பானியின் பெயர் களை அவர் எடுத்தார். அதே போல வங்கிக் கணக்குகளில் நாங்கள் பணத்தை டெபாசிட் செய்வோம் ‘டக்கா டக்.. டக்கா டக்… டக்கா டக்.. என்று சொன்னால், மறு நாள் பிரதமர் மோடியும் ‘டக்கா டக்.. டக்கா டக்’ என்று தனது உரையில் குறிப்பிடுகிறார்.
நீங்கள் பிரதமர் என்ன பேசவேண்டும் என்று நினைக்கிறீர் களோ என்னிடம் சொல் லுங்கள். என்னால் அவரை இரண்டு நிமி டங்களில் பேசவைக்க முடியும். அவர் எதுவும் பேசவேண்டாம் என்று விரும்பினாலும் என்னி டம் சொல்லுங்கள். மோடி தன்னுடைய தோல்வியை ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டார். நான் எழுதி வேண்டு மானாலும் தருகிறேன்.
ஜூன் 4-க்குப் பிறகு அவர் பிரதமராக நீடிக்க மாட்டார்”
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
இந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.