கடவுள் சக்தி எங்கே? ‘புனித’ பயணத்தின்போது தீப்பற்றி எரிந்த பேருந்து 8 பேர் உயிரிழப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சண்டிகர், மே 18- பஞ்சாப்பை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ‘புனித’ யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதற்காக 10 நாட்கள் பல இடங்களையும் சென்று சுற்றி பார்க்க வசதியாக, அவர்கள் சுற்றுலா பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் பயணித்து உள்ளனர்.

இந்நிலையில், ‘புனித’ தலம் ஒன்றிற்கு சென்று விட்டு, உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா மற்றும் பிருந்தாவன் பகுதிகளில் உள்ள இடங்களை சுற்றி பார்ப்பதற்காக அவர்கள் பேருந்தில் திரும்பி கொண்டு இருந்துள்ளனர். அந்த பேருந்து அரியானாவின் குண்டலி-மனேசர்-பால்வால் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, நூ என்ற இடத்திற்கு அருகே அதிகாலை 1.30 மணியளவில் வந்தபோது, திடீரென பேருந்தில் தீப்பற்றி கொண்டது. அந்த பேருந்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் பயணித்து உள்ளனர். பேருந்து தீப்பற்றியதும், அதனை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கவனித்து இருக்கிறார்.

உடனடியாக பேருந்தை முந்தி சென்று ஓட்டுநரிடம் தீப்பிடித்தது பற்றி எச்சரித்து உள்ளார். இதன் பின்பு, பேருந்து நிறுத்தப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டு, தீயை அணைக்கும் முயற்சியிலும், பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதுபற்றி உள்ளூர் மக்கள் கூறும்போது, பேருந்து முற்றிலும் எரிந்து போன பின்னர், 3 மணிநேரம் கழித்தே தீயணைப்பு அதி காரிகள் சம்பவ பகுதிக்கு வந்தனர்.

தீ பரவும் முன்னர், ஓடி சென்று பேருந்தின் ஜன்னலை உடைத்து, எங்களால் முடிந்தவரை உள்ளே இருந்த பலரையும் மீட்டோம். காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் நீண்ட நேரத்திற்கு பின்னரே வந்து சேர்ந்தனர் என கூறியுள் ளனர். பேருந்து தீப்பிடித்து எரிந்ததற்கான உறுதியான காரணம் எதுவும் உடனடியாக தெரிய வரவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *