செய்திச் சுருக்கம்

viduthalai
1 Min Read

அவகாசம்
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம்

வாட்ஸ்-அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை மின் வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, 500 யூனிட்டுக்கு மேல் மின் பயன்பாடு உள்ள நுகர்வோர் வாட்ஸ்-அப் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்.

ரத்து

சென்னை இ.எஸ்.அய். மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்து ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மகளிருக்கான…

சென்னை அம்பத்தூர் அரசு மகளிர் அய்டிஅய்யில் மாத உதவித் தொகையுடன் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் சேர மகளிர் விண்ணப் பிக்கலாம் என மாவடட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜாடே அறிவிப்பு.

சரிவு

தமிழ்நாடு முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருவதால் தினசரி மின் தேவை கடந்த 16ஆம் தேதியன்று 4,094 மெகா வாட் குறைந்து 16,736 மெகாவாட் என்ற அளவில் இருந்தது.

வலியுறுத்தல்

மாற்றுத் திறனாளிகளுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு, வயது வரம்பில் தளர்வு உள்ளிட்ட விதிமுறைகளை தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் செயல்படுத்துமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அறிவுறுத்தல்

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் பாதுகாப் புடன் வரவேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறி வுறுத்தி உள்ளார்.

பிரச்சாரம்

ராகுல் காந்தி, ராஜ்வித் சிங், சமிருதி, உமர் அப்துல்லா போன்ற பிரபலங்களின் தொகுதிகள் உள்பட 49 மக்களவை தொகுதிகளில் 5ஆம் கட்ட தேர்தல் வரும் 20ஆம் தேதி நடக்கிறது. இந்த தொகுதிகளில் இன்று (18.5.2024) பிரச்சாரம் ஓய்கிறது.

ஒத்திவைப்பு

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவ, மாணவியர் சேர்ககைக்கான மாநில அளவிலான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *