தமிழர்களின் ‘விடுதலை’க்கு வீரத்தோடும், விவேகத்தோடும் களம் கண்ட – கண்டுகொண்டு வருகிற – களத்தில் வெற்றிப் பெற்று வருகிற தந்தை பெரியாரின் பே(£)ராயுதமாம் ‘விடுதலை’ ஏடு தனது 90 ஆம் வயதில் வரும் ஜூன் முதல் தேதி (1.6.2024) தம் தடத்தைப் பதிக்கிறது.
மனிதர்களுக்குத்தான் பிறந்த நாளா?
‘‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு” என்ற இரு சக்கரமாகப் பயணித்த ‘விடுதலை’க்கும் பிறந்த நாள் கொண்டாடுவோம்!
‘விடுதலை’யால் பலன் பெற்ற ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் அது ஒளிரட்டும்!
அதற்கான முயற்சி – கருஞ்சட்டைத் தோழர்களே, நம் கரங்களில்தான் இருக்கிறது.
‘விடுதலை’ பிறந்த நாளான ஜூன் முதல் தேதியன்று, 90 ஆண்டு ‘விடுதலை’க்கு 62 ஆண்டு ஆசிரியர் என்னும் ஒப்பில்லா சாதனை படைத்த நமது தலைவர் ஆசிரியர் அவர்களிடம் சந்தாக்களை ஒப்படைப்போம்! ஒப்படைப்போம்!! இதில் ஒவ்வொரு நாளும் மிக முக்கியம். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ண வேண்டாம்! உடனே புறப்படுவீர், இலக்கை முடித்திடுவீர்! நமது ஆசிரியரின் புன்னகைக்கு இதைவிட விலை மதிப்பில்லாத பொருள் ஏது?
விரைவோம், வினை முடிப்போம்!
– கலி.பூங்குன்றன்,
‘விடுதலை’ பொறுப்பாசிரியர்