6.9.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉டில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை. நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினையை எழுப்ப முடிவு.
👉ஜி 20 அழைப்பிதழில் ‘பாரத் ஜனாதிபதி’ என்று குறிப்பிட்டதால் சர்ச்சை. இந்தியாவை ‘பாரதம்’ என மாற்ற திட்டமா?: மசோதா கொண்டு வர முடிவு என்ற தகவலால் பரபரப்பு
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
👉 மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுத்திட தமிழ் நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 ஜாதியின் கொடுமையை ஒப்புக் கொள்ளாமல் சனாதன தர்மத்தை பாதுகாப்பது தார்மீகப் போலித்தனம் என்கிறார் கட்டுரையாளர் பிரதாப் பானு மேத்தா.
தி ஹிந்து:
👉”இந்தியா” கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 13ஆம் தேதி டில்லியில் நடை பெற உள்ளது. உடனடி பணிகளுக்கான காலக் கெடுவை நிர்ணயிப்பது, தொகுதிகள் பகிர்வு, தொலைநோக்கு ஆவணம்-பொது அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் கூட்டுப் பிரச்சார பேரணிகளுக்கு தேதிகளை இறுதி செய்வது ஆகியவை அட்டவணையில் உள்ள நிகழ்ச்சி நிரலாகும்.
👉 ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ திட்டம், அற்பமான அடிப்படையில் முன்வைக்கப்பட்டது, அரசியல் ரீதியாக சாத்தியமற்றது, நிர்வாக ரீதியாக செயல்படுத்த முடியாது மற்றும் அரசமைப்பு ரீதியாக சாத்தியமற்றது என் கிறார்கள் கட்டுரையாளர்கள் சசி தரூர், எம்.பி, பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸ் கட்சியின் தகவல் ஆய்வு தலைவர்.
👉 இந்தியாவை பாரத் என பெயர் மாற்றம் செய்வதா?, இது வரலாற்றை சிதைக்கும் அப்பட்டமான முயற்சி என மம்தா கண்டனம்.
– குடந்தை கருணா