புதுடில்லி, மே 17 காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம் பட்ஜெட், இந்து பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி கற்பனையான குற்றச் சாட்டுக்களை முன்வைப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித் துள்ளார். ஒன்றிய பட்ஜெட்டில் 15 சதவீத தொகையை முஸ்லீம்களுக்கு மட்டுமே செலவிட மன்மோகன் சிங் திட்டம் தீட்டியதாக மோடி கூறுவது முற்றிலும் தவறானது என்றும், பிரதமரின் உரையை எழுதுவோர் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “பிரதமரின் அறிக்கைகள் மேலும் மேலும் வினோதமானதாக மாறி வருகின்றன. அவரது உரை எழுதுபவர் கள் தங்கள் சமநிலையை இழந்து விட் டதையே இது காட்டுகிறது. நேற்று (14.5.2024)தான் இந்து-முஸ்லிம் பிரி வினைப்பற்றி பேசினால், பொது வாழ்வில் இருக்கவே தகுதியற்றவன் என்று கூறியிருந்தார். ஆனால், இன்று (15.5.2024) வழக்கம் போல இந்துக்கள் – முஸ்லிம்கள் இடையே பிரிவினை ஏற்படுத்தும் வகை யில் பேசியுள்ளார். ஒன்றிய பட்ஜெட்டில் 15 சதவீதத்தை முஸ்லீம்களுக்கு மட்டுமே செலவிட டாக்டர் மன்மோகன் சிங் திட்ட மிட்டிருந்தார் என்ற பிரதமரின் குற்றச் சாட்டு முற்றிலும் தவறானது. காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு தனி பட்ஜெட், இந்துக் களுக்கு, தனி பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளதாக அவர் கூறிய குற்றச் சாட்டு மிகவும் மோசமானது. அது முற் றிலும் கற்பனையானது என்றே சொல்ல முடியும்.
இந்திய அரசமைப்பின் 112 ஆவது பிரிவு நாட்டிற்கு ஓராண்டு பட்ஜெட் மட்டுமே இருக்கவேண்டும் என்கிறது. அதுதான் யூனியன் பட்ஜெட். அப்படி இருக்கும் போது நாட்டிற்கு இரண்டு பட் ஜெட்டுகள் எப்படி இருக்க முடியும்? தேர்தல் பிரச்சாரத்தின் எஞ்சிய நாள் களில், பிரதமர் மோடி இதுபோல பேசு வதை கைவிடுவார் என்று நம்புகிறேன்.. பிரதமரின் பேச்சுக்களை இந்திய மக்கள் மட்டுமின்றி. உலகமே உற்றுப் பார்த்து வருகிறது. அவை இப்போது இந்தியா வுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.