சென்னை,மே17- மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினரு மான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கட்டாயமாக அமல் படுத்துவோம் என்று மோடியும் அமித்ஷாவும் பேசி வருவது முஸ்லிம்களுக்கு எதிரானது தானே? நாடாளுமன்றத் தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிற போது பிரதமரின் பொருளாதார ஆலோ சனை குழு 2015ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையை இப்போது வெளியிட்டு இந்தியா வில் இந்துக்களின் மக்கள் தொகை 84 சதவீதத்திலிருந்து 78 சதவீதமாக குறைந்துவிட்டது.
தேர்தல் பிரச் சாரக் கூட்டங்களில் மிகக் கடுமை யாக இஸ்லாமிய வெறுப்பை கக்கி விட்டு, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் எதிர்க் கட்சிகளின் ‘இந் தியா’ கூட்டணிக்கு ஆதரவு அலை பெருகி கொண்டி ருப்பதனால், தொலைக்காட்சி நேர் காணலில் பிரதமர் மோடி தான் பேசியவற்றை மூடி மறைக்கப் பார்க்கிறார்.
“இந்து – முஸ்லிம் அரசியல் பேசத் தொடங்கினால் அந்த நாள் முதல், நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன்” என்று பிரதமர் மோடி கூறி இருப்பதன் நோக்கத்தை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். பிரதமர் அள்ளி வீசி வரும் அவதூறுகளையும் பொய் உரைகளையும் புறக்கணித்து இந்திய நாட்டு மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பதிலடியை கொடுப்பார்கள். -இவ்வாறு வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.