புதுடில்லி, மே 17- உத்தரப்பிரதேச மாநிலத்தின் மத மாற்றத்தடை சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதி ரானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதம் மாறுவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அலகாபாத்தில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜேந்திர பிகாரிலால், அதன் இயக்குநர் வினோத் பிகாரிலால் ஆகியோர் 90-க்கும் மேற்பட்ட வர்களை மதமாற்றியதாக குற்றம் சாட்டி உத்தரப்பிரதேசம் மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு மதமாற்ற தடை சட்டம் அரசியல் சாசன பிரிவு 25க்கு எதிரானது என்று கூறினர்.
பின்னர், துணை வேந்தர் மற்றும் இயக்குநர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
உ.பி. மாநிலத்தின் மதமாற்றத் தடை சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது! உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
Leave a Comment