உடல் பரிசோதனை செய்வதற்கு ரத்த மாதிரிகளை எடுக்க ஊசிகளே பயன்படுகின்றன. பலருக்கு ஊசி என்றால் பயம். இதனால் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சூரிச் பல்கலை விஞ்ஞானிகள் அட்டையின் பற்கள் போன்ற நுண் ஊசிகளை உடைய கருவியை உருவாக்கி உள்ளனர். இது வலி இல்லாமல் ரத்தத்தை சரியாக உறிஞ்சும்.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அமைப்பு 280 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வில், அதிகமாகக் கோபப்படும் போது ரத்த நாளங்கள் தொடர்ந்து வேகமாக இயங்குவதால் அவற்றுக்குப் போதுமான ஓய்வு கிடைப்பதில்லை என்றும் இதனால் தான் இதயம் பாதிக்கப்படுகிறது என்றும் கண்டறிந்துள்ளனர்.