சென்னை,மே 16- ரஷ்யாவில் பயிற்சி முடித்த நிலையில், ககன் யான திட்டத்திற்குதேர்வு செய்யப் பட்டுள்ளவர் களில் 2 விண்வெளி வீரர்கள் அமெரிக்காவில் உள்ள நாசாவிற்கு பயிற்சிக்காகசெல்ல உள்ளனர்’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
நிசார் செயற்கைக்கோள்
ஆந்திர மாநிலம் சிறீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் இருந்து நிசார் செயற்கைகோள் அனுப்புவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.
இந்த செயற்கைகோள் வெற்றி கரமாக ஏவிய பின்னர், அதனுடைய நகர்வுகள் துல்லியமாக கண் காணிக்கப்பட உள்ளது. இவை 2 பட்டைகள் கொண்ட செயற்கைத் துளை ராடார் செயற்கைகோ ளாகும். ஒன்று எஸ்-பேண்ட். இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. மற்றொன்று எல்-பேண்ட்.இது அமெரிக்காவால் தயாரிக்கப் பட்டது. அத்துடன் பெரிய அளவிலான ஆன்டெனாவையும் அமெரிக்கா அளிக்க உள்ளது. இது ‘டெக்டோனிக்’ என்ற நவீன இயக்கங்களை துல்லியமாக கண் காணிக்க முடியும். இதன் மூலம் நீர்நிலைகளையும் துல்லியமாக அளவிட முடியும். பூமியில் தண் ணீர் பற்றாக்குறை உள்ள இடங் களில் எல்லாம் எவ்வளவு அழுத்த மாக இருக்கிறது என்பதை பார்க்க முடியும். இது ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு தரையிலும் ஊடுருவக் கூடியது.
காலநிலை மாற்றம் தகவல்கள்
அத்துடன், உறை பனியையும் கண்காணிக்கும் திறன் கொண்டது.எனவே. இது அடிப்படையில் பூமியின் மேற்பரப்பு முழுவதையும் ஆய்வு செய்யும். மாதத்திற்கு 2 முறை பூமியின் முழுவதையும் ஆய்வுக்கு எடுத்து கொள்கிறது.
காலநிலை மாற்றம் தொடர் பான சிக்கல்கள், விவசாய மாற் றங்கள், விளைச்சல், பாலைவனம் மற்றும் கண்ட நகர்வுகள் ஆகிய வற்றை துல்லியமாக அறிய முடி யும். எனவே புவியியல், விவசாயம் மற்றும் நீர் தொடர்பான பல தகவல்களை இந்த செயற்கை கோளில் இருந்து பெற முடியும். நிசார் செயற்கைகோள் வருகிற ஜூலை மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவால் அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பதால் ஜூலை மாதத்திற்கு பதில், வருகிற அக்டோபர் – நவம்பர் மாதங்களில் விண்ணில் செலுத் தப்பட வாய்ப்பு உள்ளது.
அமெரிக்காவில் பயிற்சி
மனிதனை விண்ணுக்கு அனுப் பும் ககன்யான திட்டத் திற்காக, இந்திய விமானப்ப டையில் பணியாற்றும் கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த திருவாழியாடு பகுதியை சேர்ந்த குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், தமிழ்நாடு சென்னையைச் சேர்ந்த குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜை சேர்ந்த குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் மற்றும் லக் னோவை சேர்ந்த விங்க் கமாண்டர் சுபான்ஷூ சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ககன்யான் திட்டம் மூலம் விண்வெளி செல்ல உள்ளனர்.
நாட்டிற்கே பெருமை சேர்க்கும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் ரஷியா நாட்டில் மாஸ்கோவில் பயிற்சியை முடித்து வந்து உள்ளனர். இவர்களுக்கான லோகோவை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். இந்நிலையில் இவர்களில் 2 பேர் அமெரிக்காவில் உள்ள நாசாவிற்கு பயிற்சிக்காக செல்ல உள்ளனர். அதில் ஒருவர் அமெரிக்கா நாட்டு ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்துக் கும் அழைத்து செல்லப்பட உள் ளார். தற்போது ககன்யான் திட் டத்திற்காக ஆளில்லா ராக்கெட்டை சோத னைக்காக அனுப்ப தயாராகி வருகிறோம்’ என்று இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் கூறினர்.