ஹிந்து மதத்தை விமர்சிக்க கூடாது என்று ஒருவர் பதிவு போட்டார்.
நீங்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்று கேட்டேன். அவர் ஒரு ஜாதிப் பெயரை கூறினார்.
அந்த ஜாதி எந்த பிரிவில் வருகிறது என்றேன். “தாழ்த்தப்பட்ட பிரிவு (ஷிசி)” என்றார்.
“தாழ்த்தப்பட்ட பிரிவு” என்று சொல்கிறீர்களே, யார் உங்களை அப்படி தாழ்த்தியது என்று கேட்டேன்.
தயக்கத்துடன், “மதம்தான்” என்றார்.
உங்கள் தலைமுறையை வாழை யடி வாழையாக தாழ்த்தி வைத் திருந்தவர்களை விமர்சிப்பது சரியா?, தவறா? என்று கேட்டேன்..
அவரிடம் பதில் இல்லை.
இப்படித்தான் இவர்கள் புரிதல் இருக்கிறது. இவர்கள் தாங்களாகவே தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப் பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள் என்று இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.
ஆனால்…. ஏன்? அப்படி தாழ்த்தப்பட்டோம்,
யாரால்? தாழ்த்தப்பட்டோம்,
ஏன்? பிற்படுத்தப்பட்டடோம் யாரால் மிகவும் பிற்படுத்தப்பட்டோம் என்ற சாதாரண சிந்தனை கூட இவர்களிடம் இல்லை..
– படித்ததில் சிந்தித்தது
(இது ஒரு முகநூல் உரையாடல்.)