ஒன்றிய அரசின் பொய் அம்பலமானது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை ஆர்.டி.அய். தகவல்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மே 15- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற விவரம் ஆர்.டி.அய்இல் தெரியவந்துள்ளது.
இத்துடன் சேர்த்து இதர நகரங் களுக்கு அறிவிக்கப்பட்ட 3 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மட்டும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்ற விவரமும் கிடைத்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரி சலை குறைக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப் பட்டது.

மெட்ரோ ரயில் முதல் கட்டம், முதல் கட்ட நீட்டிப்புக்கு பிறகு, 54 கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவுக்கு (முன்பு 118.9 கி.மீ. ஆக இருந்தது) 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படு கிறது.
கடந்த 2021-2022ஆம் நிதியாண் டுக்கான நிதிநிலை அறிக்கையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனுடன் சேர்த்து பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு (2ஏ மற்றும் 2 பி) ரூ.14,788 கோடி நிதியும், கொச்சி மெட்ரோ ரயில் (2ஆம் கட்டம்) திட்டப்பணிகளுக்கு ரூ.1,957 கோடி நிதியும், நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளுக்கு ரூ.5,976 கோடி நிதியும், நாசிக் மெட்ரோ திட்டத்துக்கு ரூ.2,092 கோடியும் வழங் கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை, நாசிக் மெட்ரோ ரயில் திட்டங்களை தவிர, இதர 3 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மட்டும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி யுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

அதன்படி, கொச்சி, பெங்களூரு, நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மொத்தமாக ரூ.18,978 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சென்னை சிட்லப் பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறும்போது:
“ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என்ற தகவல் ஆர்.டி.அய்-இல் தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில், கொச்சி, பெங்களூரு, நாக்பூர் ஆகிய மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என்பது மிகப்பெரிய பின்னடைவாகும்.
எனவே, இத்திட்டத்துக்கு தேவை யான நிதியை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *