சண்டிகர், மே 15- குறைந்தபட்ச ஆதார விலை உட்பட 13 கோரிக் கைகளை வலியுறுத்தி 2 கட்டமாக டில்லி எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை ஈவிரக்கமின்றி மோடி அரசு டில்லி காவல்துறையினர், துணை ராணுவப்படையினரை ஏவி தாக்குதல் நடத்தியது.
2 கட்ட போராட்டங்களில் மோடி அரசின் கொடூர தாக்குதலால் 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் மக் களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தரும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை விரட்டியடித்து வருகின்றனர். இத னால் பா.ஜ.க. வேட்பாளர்கள் இரு மாநிலங்களிலும் பிரச்சாரம் செய் யாமல் வீடு மற்றும் கட்சி அலு வலகங்களில் முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 2022இல் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகளால் விரட்டி யடிக்கப்பட்ட நிகழ்வு போல, மீண்டும் அரங்கேறக் கூடாது என்பதற்காக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தக்த் சிறீ ஹர்மந்திர் சாஹிப் குருத்வாரா வில் சீக்கிய பக்தர்களுக்கு தானே உணவு சமைத்து, தானே பரிமாறுவது போல ஷூட்டிங் எடுத்து பஞ்சாப் மக்களின் மனதில் இடம் பிடிக்க திட்டம் போட்டுள்ளார் பிரதமர் மோடி.
சமைத்த உணவை மீண்டும் சமைத்த மோடி!
பாட்னா சாஹிப் குருத்வாரா வில் நுழைந்தவுடன் சீக்கியர் களின் தலைப்பாகையை அணிந்து கொண்ட பிரதமர் மோடி, தனது ஒளிப்பட மற்றும் காட்சிப் பதிவுக்காக ஊழி யர்களின் முன்னிலையில், சமைத்து வைத்திருந்த உணவை மீண்டும் தானாக சமைப்பது போல சமைத்தும், சப்பாத்தி மாவை ஒரு பிழி பிழிந்தும் படப்பிடிப்பைப் போட்டார். அதன் பின் உணவை தானே கொண்டு வந்து சீக்கிய பக்தர்களுக்கு பரிமாறினார்.
சீக்கிய மக்கள் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த பெண்களிடம் காலில் விழுந்து ஒரு கும்பிடுபோட்டு, சாஹிப் குருத் வாராவை விட்டு வெளியேறினார்.
பிரதமர் மோடியின் இந்த குரு வாத்ரா ஷூட்டிங்கை பா.ஜ.க. வினர் மட்டுமே சமூக வலை தளங்களில் விருப்பமான வீடியோ என்று லைக் செய்து வரும் நிலை யில், பஞ்சாப் விவசாயிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் மோடியின் படப்பிடிப்பை குருத்வாரா விற்குள்ளேயே நசித்துப் போனது.
மறக்க முடியாத 2022ஆம் ஆண்டு!
2021இல் போராட்டத்தை ஒடுக் கியதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்த பிரதமர் மோடி 2022இல் பாட்னாவை போன்று டில்லி குருத் வாராவில் ஷூட்டிங் நடத்தினார். அதன்பின் பஞ்சாப் நோக்கி சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றார்.
ஆனால் பஞ்சாப் மாநில எல்லையான பெரோஸ்பூரிலேயே மோடியை வழிமறித்த விவசாயிகள்,”எங்களை தாக்கி விட்டு, எங்கள் மாநிலத்திற்குள் நுழையக் கூடாது” என தெரிவித்து மோடியை விரட்டியடித்தனர். இந்த சம்பவம் 2022 ஜன வரி 5 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வை திசை திருப்ப பிரதமர் மோடி பஞ்சாப் எல்லையில் உயிர் பிழைத்து வந்தேன் என்று அழாத குறையாக கூறினார். இந்த நிகழ்வு போன்று தற்போதைய மக்களவைத் தேர்தலிலும் அரங்கேறக் கூடாது என்பதற்காக மோடி பாட்னா குருத்வாராவில் படப்பிடிப்பை போட் டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.