அகிலேஷ் கேள்வி
லக்னோ, மே.15- உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி நக ரில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச மேனாள் முதல மைச்சருமான அகிலேஷ் ஆகிய இருவரும் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர். அப்போது பேசிய அகிலேஷ், “மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே சேவை புரிகிறது. இளைஞர்களையும், விவசாயிகளையும் புறக்கணித்துவிட்டது. இந் திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்காக பாடுபடும். 4 கட்ட நாடாளுமன்றத் தேர்தல்களின் போக்குகள் பா.ஜனதாவின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்பதற்கும் தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைவது உறுதி என்பதற்கும் சான் றாகும். உத்தரப்பிரதேசத்தில் அடிக்கடி வினாத் தாள் கசிந்து வருவதால் இளைஞர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகியுள்ளது” என்றார்.