கொல்கத்தா, மே15- ‘தான் சமைத்துக் கொடுக்க தயார். பிரதமர் மோடி அதை சாப்பிடு வாரா? என்று மம்தா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மாமிச உணவு சர்ச்சை
இந்துக்கள் விரதம் இருக் கும் மாதத்தில் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி, மாமிச உணவை சாப்பிட்டவர் என்று பிரதமர் மோடி சமீபத்தில் குறை கூறியிருந்தார்.
மீன், மாமிசம், முட்டை போன்ற அசைவ உணவை சாப்பிட வேண்டாம் என்ற கருத்துப்பட அவரது பேச்சு அமைந்து இருந்தது.
அதற்கு பதில் அளிக்கும் விதத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா தற்போது ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
மேற்குவங்காள மாநிலம் பராக்பூர் நகரில் தேர்தல் பிரச் சாரத்தின் போது இதுபற்றி மம்தா பேசியதாவது:-
பிரதமர் மோடி விரும்பி னால் அவருக்கு சமைத்து கொடுக்க தயார். ஆனால் நான் சமைத்துக் கொடுப்பதை அவர் சாப்பிடுவாரா என்பது தெரியாது. சிறுவயதில் இருந்தே எனக்கு சமைக்க தெரியும்.
பல்வேறு மாநில உணவு வகை களை நான் சாப்பிட்டு இருக்கிறேன். எனக்கு இதில் எந்தவித பாகுபாடும் கிடை யாது. மக்கள் எந்த உணவை விரும்புகிறார்களோ அதை சாப்பிடலாம். எப்போது எல்லாம் விரும்புகிறார்களோ அப்போது எல்லாம் சாப்பிட லாம்.
சைவ உணவை விரும் பினால் காய்கறிகளைச் சாப் பிடலாம். அசைவ உணவை விரும்பினால் மாமிசத்தைச் சாப்பிடலாம். இந்த நாடு அனைவருக்கும் சொந்த மானது. மாறுபட்ட பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள், வேறுபட்ட மொழிகளை கொண்டது நமது நாடு.
-இவ்வாறு முதலமைச்சர் மம்தா பேசினார்.
200 இடங்கள் கூட…
400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் பேசி வருவது பற்றி மம்தா தனது பேச்சில் குறிப் பிட்டார். “அவர்களால் 200 இடங்களைக் கூட எட்ட முடி யாது. பா.ஜனதாவால் மீண் டும் ஆட்சிக்கு வர முடியாது. அவர்களின் முகங்களே அவற்றை வெளிப்படுத்துகின்றன” என்றார்.