“சனாதனம் என்பது கொடிய எச்.அய்.வி. வைரஸ் போன்றது” ஆ.ராசா பேச்சு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

உதகை செப்.8 ‘சனாதனம் என்பது கொடிய எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.அய்.வி வைர ஸைப் போன்றது’ என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணை பொதுச் செய லாளருமான ஆ.ராசா பேசியிருக்கிறார். 

நீலகிரி மாவட்ட தி.மு.க. வாக்குச்சாவடிகள் நிலை முகவர்கள் கூட்டம் உதகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 7.8.2023 அன்று நடைபெற்றது. சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்ற இந்தக் கூட்டம், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான  ஆ.ராசா தலை மையில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான முகவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் ஆ.ராசா பேசும்போது, “வரும் நாடாளுமன்ற தேர்தல் தேசத்தை காக்க வேண்டிய தேர்த லாகும். தேசத்தை பாதுகாக்கும் பொறுப்பு தி.மு.க. தலைவர் தோள் மீது உள்ளது. எனவே, அனைவரும் தேர்தல் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். பிரதமர் மோடிக்கு ‘இந்தியா’ என்ற பெயராலேயே பயம் ஏற்பட்டுள்ளது. மக்களின் பணத்தை எடுத்து தனிநபருக்கு கடனாக கொடுத்துள்ளார். 

இதுகுறித்து ஹிட்டன்பர்க் அறிக்கை வெளியிட்டதும், அதை மறுக்கவில்லை. மாறாக மவுனம் கடைப்பிடிக்கிறார். மணிப் பூரில் இன அழிவு ஏற்பட்டும், இதுவரை அது குறித்து வருத்தமோ, மன்னிப்போ கூறவில்லை. மாறாக உள்துறை அமைச்சர் அதை நியாயப்படுத்தும் வகையில் பேசுகிறார். இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மட்டுமே குரல் எழுப்புகிறார். 

தேசத்துக்கு ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மட்டுமே எதிர்த்து வருகிறார். பிறப்பால், ஜாதியால் யாரும் உயர்ந்த வர்களும் அல்ல; தாழ்ந்தவர்களும் அல்ல. மதத் தின் பெயராலும் ஜாதி யின் பெயராலும் நாட்டு மக்களைப் பிளவுப் படுத்துவோரை எதிர்க்கும் ஒரே சக்தியாக தி.மு.க. இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் கட்சியின் இளைஞர் அணி செயலாள ராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட டெங்கு, மலேரியா போன்ற நச்சுக் கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு, இதை ஒழிக்க வேண்டும் என தெரிவித்த கருத்தைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். இந்தச் சிந்தனை போதும், இன்னும் நூற்றாண்டு களைக் கடந்தும் இந்த இயக்கமும் தத்துவமும் தழைக்கும். உண்மையில், சொல்லப்போனால் சனாதனம் என்பது கொடிய எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.அய்.வி வைரசைப் போன்றது. பாரபட்சமின்றி ஒழித்துக்கட்ட வேண்டும்” என்றார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *