‘தென்காசி, செப். 8 – தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழகமும், கொடிக் குறிச்சி ஜெ.எஸ்.பி. பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தேசிய அறிவியல் மனப்பான்மை விளக்க கருத்தரங்கம் 1-09-2023,நண்பகல் 1.30 மணி அளவில் கல்லூரி அரங் கத்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு கல்லூரி தலைவர் ஹி.செல்வராஜ் தலைமை தாங்கி உரையாற்றினார். மாநில ப.க. அமைப்பாளர் K.T.C.குருசாமி, மாவட்ட ப.க.தலைவர் முனைவர் G.S.S.நல்லசிவம், முதல்வர், ஸ்டெல்லா மேரி கல்வியியல் கல்லூரி ஆகியோர் முன்னிலை வைத்தனர். சீ.டேவிட்செல்லத்துரை காப்பாளர்,திராவிடர் கழகம் வழி காட்டுதல் உரையாற்றினார்கள்.முனைவர் சி.தங்கலட்சுமி கல்லூரி முதல்வர் அனைவரையும் வர வேற்று, சால்வை அணிவித்தார். வழக்குரைஞர் த.வீரன் (தலைவர், மாவட்ட தி.க.) தொகுப்புரை வழங்கினார்கள்.
மாவட்ட ப.க.செயலாளர் ஆலடி எழில்வாணன், நிர்வாக இயக்குனர், ஆலடி அருணா கல் விக்குழுமம் மாணவியர்களிடையே பெரியார் பற்றிய வினாடி – வினா நடத்தி பெரியார் புத்தகங்களை பரிசளித்தார்.
மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் வா.நேரு, மாணவிகளிடையே பேய்,பிசாசு பற்றிய பித்தலாட்டங்களை விளக்கி கூறினார்.
ம.தி.தா இந்துக்கல்லூரி பேராசிரியர் ஆ.திருநீலகண்டன், நரேந்திர தபோல்கரின் வாழ்வியல் சிந்தனை பற்றி உரையாற்றினார். உரையாற்றிய மூவரும் பகுத்தறிவு, மூடநம்பிக்கை, பெண்ணுரிமை, தேசிய அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை மாணவியர்களி டையே சிறப்பாக விளக்கினார்கள்.
300-மாணவியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி தலைவர், முதல்வர் ஆகியோருக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக பெரியார் புத்தகங்கள் அளிக்கப்பட்டது.