மும்பை,நவ.20 – இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத் (36). முக்கிய ஹிட் படங்களில் நடித் துள்ளதால் கங்கனா ரணாவத் பாலிவுட் திரையுலகில் மட்டு மின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகி லும் நட்சத்திர நடிகையாக பார்க்கப்படும் நிலை யில், தமிழில் “தாம் தூம்”, “தலைவி”, “சந்திர முகி 2” படத்திலும் நடித்துள் ளார். இந்நிலையில் அவர், இந்துத்துவா மற்றும் மனுதர்மத்தை ஆதரிக்கும் நிலைப் பாட்டைக் கூறி வரு கிறார். முக்கியமாக, “சமூகத்துக்கான நல்ல கருத்துகளைச் சொல் கிறேன், அரசியல் கருத் துகளைச் சொல்கிறேன்” என இந்துத்துவா கருத் துக்களை கூறி பாஜக மற்றும் பிரதமர் மோடி யின் ஊதுகுழலாக செயல்பட்டு வரு கிறார்.
கங்கனாவின் இந்துத் துவா செயல்பாடு களும், கருத்துகளும் அவர் மீது மக்களுக்கு அதீத வெறுப் புணர்வை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக அவர் நடித்த படங்களை ரசி கர்கள் கண்டு கொள்வதில்லை. ரசிகர் கள் ஆதரவின்மையால் கங்கனாவின் படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வரு கின்றன. சமீபத்தில் கங்கனா நடிப்பில் வெளி யான “தேஜஸ்” திரைப்படம் அக்டோபர் மாதம் 27 அன்று திரைக்கு வந்தது. “தேஜஸ்” திரைப் படம் வெளியாகிய தியேட் டர்களுக்கு ரசிகர்கள் யாரும் செல்லாததால் இருக்கைகள் மட்டுமே படத்தை பார்த்தன. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்ததால் 90% திரையரங்குகள் “தேஜஸ்” படத்தை எடுத்துவிட்டு வேறு படங்களை திரையிட ஆரம்பித்தன. இந்துத் துவா கருத்துகளை பேசி வரு வதற்கு பலனாக “தேஜஸ்” திரைப்படம் அனை வரும் பார்க்க வேண்டிய படம் என வரிச்சலுகை அளித்து, பள்ளி மாணவர்களை பார்க்க வைத் தது பாஜக ஆளும் உத்தரப்பிரதேச அரசு. “தேஜஸ்” மட்டும் தோல்வியை சந்திக்க வில்லை. “சந்திரமுகி 2”, “தக்கட்”, “தலைவி”, “பங்கா”, “ஜட்ஜ்மெண் டல் ஹே கியா”, “சிம்ரன்”, “ரங்கூன்”, “கட்டி பட்டி”, “அய் லவ் நியூ யார்க்” ஆகிய 9 படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன. தொடர்ச் சியான தோல்விகளால் துவண்ட கங்கனா ரணாவத், சினிமாவில் தனது ஆட்டம் முடி வுக்கு வருவதை உணர்ந்து, திடீ ரென்று அரசியல் பக்கம் தன் கவனத்தை திருப்பி, “கிருஷ்ண பகவான் நினைத்தால், நான் தேர் தலில் போட்டியிடு வேன்” என்று கூறி யுள் ளார். இவருக்கு பாஜக சார்பில் சீட் வழங்கப்படு வதாக தகவலும் வெளியாகியுள்ளது.