பாட வாரியாக 100க்கு 100 பெற்றவர்கள்
சென்னை,மே14- தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 3 ஆயிரத்து 471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்தும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இதுதவிர, 5 ஆயிரம் தனித் தேர்வர்களும், 187 சிறைக் கைதிகளும் பிளஸ்-1 தேர்வை எழுதினார்கள்.
இந்த நிலையில், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. சென்னை நுங்கம் பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவல கத்தில் தேர்வு முடிவுகளை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
பள்ளி வாரியாக பெற்ற தேர்ச்சி விகிதம்:
அரசுப்பள்ளிகள் 85.75 சதவீதம், அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36 சதவீதம், தனியார் சுயநிதி பள்ளிகள் 98.09 சதவீதம், இருபாலர் பள்ளிகள் 91.61 சதவீதம், பெண்கள் பள்ளிகள் 94.46 சதவீதமாகும்.
பாடப்பிரிவு வாரியாக பெற்ற
தேர்ச்சி விகிதம்:
அறிவியல் 94.31 சதவீதம், வணிகவியல் 86.93 சதவீதம், கலைப்பிரிவு 72.89 சதவீதம், தொழிற்பாடம் 78.72 சதவீதமாகும்.
பாட வாரியாக 100க்கு 100 பெற்றவர்கள்:
தமிழ் 8, ஆங்கிலம் 13, இயற்பியல் 696, வேதியியல் 493, உயிரியல் 171.
கணிதம் 779, தாவரவியல் 2, விலங்கியல் 29, கணினி அறிவியல் 3432, வணிகவியல் 62.
கணக்கு பதிவியல் 415, பொருளியல் 741, கணினி பயன்பாடுகள் 288, வணிக கணிதம், புள்ளியியல் 293.