பெங்களூரு, மே 14 மூடநம்பிக்கைக்கும் மூடப் பழக்க வழக்கங்களுக்கும் எதிராகப் போராடிய நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெற்ற தால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் எழுத்தாளருமான கோவிந்த் பன்சாரே, கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி, பத்திரி கையாளரும் சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் ஆகியோ ரின் கொலை வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டனை பெறுவார்கள் என உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நான்கு கொலைகளும் ஒன்றோ டொன்று தொடர்புடையவை என்று ஆகஸ்ட் 2023 இல் உச்ச நீதிமன்றத்தில் தபோல்கரின் மகள் முக்தா தெரிவித்தார். இதையடுத்து, இந்த கொலைகளுக்கு பின்னணியில் உள்ள ‘பெரிய சதி’ குறித்து விசா ரிக்க சிபிஅய்க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நான்கு கொலைகளுக்கும் பின்னணி யில் தீவிரவாத இந்துத்வா அமைப்பான ‘சனாதன் சன்ஸ்தா’வின் பங்கு இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
தபோல்கர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களில் சிலர் பன்சாரே கொலை வழக் கிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். தபோல்கர் வழக்கில் 10.5.2024 அன்று புனே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சச்சின் அன்டுரே, சனாதன் சன்ஸ்தா ஊழியர் ஆவார். இவர், பன்சாரே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வர். கல்புர்கி, தபோல்கர், பன்சாரே ஆகியோர் ஒரே ஆயுதத்தால் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மூன்று இடங்களில் இருந்தும் 7.65 மி.மீ நாட்டுத் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப் பட்டது. தபோல்கர் மற்றும் பன்சாரே கொலை களுக்கு ஒரே துப்பாக்கி பயன்படுத்தப் பட்ட தாகவும், கொலை யாளிகள் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ததாகவும் மும்பை உயர்நீதிமன்றத்தில் சிபிஅய் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நான்கு கொலைகளின் சதி ஒரே கும்பலால் தீட்டப்பட்டது என்ற சந்தேகம் வலுத்தது. கொலையைச் செய்தவர் களைக் கைது செய்வது மட்டுமின்றி, சதி செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை யும் எழுந்தது. ஆனாலும், நான்கு கொலைகள் குறித்தும் தனித்தனியாக புலன் விசாரணையும் நீதி விசாரணைகளும் நடந்து வருகின்றன. கல்புர்கி, கவுரிலங்கேஷ் கொலை வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த கருநாடக அரசு டிசம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தது. பன்சாரே வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கினாலும், மந்தமாகவே நடந்து வருகிறது.