உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரையில்
3 நாளில் 4 பக்தர்கள் மரணம்.!
அரித்வார், மே 14- உத்தரகாண்ட் சார்தாம் ‘புனித’ யாத்திரையில் பங்கேற்றவர்களில் கடந்த 3 நாளில் 4 பக்தர்களுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட்டதால், அவர்கள் உயிரிழந்தனர். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ’புனித’ தலங்களான அரித்வார், யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு பக்தர்கள் செல்வதற்காக சார்தாம் யாத்திரை என்று கடந்த சில நாள்களுக்கு முன் தொடங்கியது.
இந்த யாத்திரை என்பது உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரி கோயிலில் இருந்து தொடங்கி உயரமான இடங்களில் அமைந்துள்ள மற்ற கோயில்களுக்கு செல்கிறது. கடந்த 10ஆம் தேதி யாத்திரை தொடங்கிய 72 மணி நேரத்தில், இதுவரை நான்கு பேர் இதயநோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். குஜ ராத்தைச் சேர்ந்த லட்சுமி தேவி (வயது75) என்பவர் 12.5.2024 அன்று உயிரிழந்தார். அதேபோல் 62 வயதான சம்பாதி பாய், இதயக் கோளாறு காரணமாக யமுனோத்ரியில் கடந்த 11.5.2024 அன்று காலமானார். அதற்கு முன்னதாக 10.5.2024 அன்று, உ.பி.யைச் சேர்ந்த விமலா தேவி (வயது 69), மத்தியப் பிரதேசத்தை ராம்கோபால் (வயது 71) ஆகியோர் உயிரிழந் துள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர்.