விமானப் பயணக் கட்டணம் ஆறு மடங்காக உயர்த்தப்பட்டது!
11 மாதங்களில் ஏழாவது முறையாக அதிகரிப்பு
புதுடில்லி,நவ.20 – கேரளத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக் கான கட்டணத்தை விமான நிறுவனங்கள் 6 மடங்கு உயர்த்தி யுள்ளன. இந்த உயர்வு டிசம்பர் 1ஆம் தேதி முதல் அம லுக்கு வருகிறது. 11 மாதங்க ளில் இது ஏழாவது கட்டண உயர்வு. ஆனால் மும்பை, டில்லி மற்றும் கொல்கத்தாவில் இருந்து கட்டணம் உயர்த் தப்பட வில்லை. வளைகுடா நாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு இந்த கட்டணக் கொள் ளைச் சம்பவம் நடந் துள்ளது.
விமானக் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப் பட்டாலும் ஒன்றிய அரசு இதில் தலையிடுவதில்லை. எதி ஹாட் ஏர்வேஸில் புத்தாண்டு நாளன்று திருவனந்தபுரத்திலிருந்து துபாய்க்கு எகானமி வகுப்புக்கு ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. தற்போது பத்தாயி ரத்திற் கும் குறைவாகவே கட் டணம் உள்ளது. ரூ.50 ஆயிரம் வணிக வகுப்பிற்கு ரூ.1,61,213 செலுத்த வேண் டும். தற்போது எதிஹாட் ஏர்லைன்ஸ் நிறு வனம் துபாய் எகனாமி வகுப் பிற்கு ரூ.26,417 மற்றும் கரிப்பூர் மற்றும் நெடும் பாச்சேரி விமான நிலை யங்களில் இருந்து வணிக வகுப்பிற்கு ரூ.42,960 வசூலிக்கிறது. இது முறையே ரூ.50 ஆயிரமாக வும், ரூ.83,527 ஆகவும் உயரும்.
கேரளத்தில் இருந்து அய்க்கிய அரபு எமிரேட் ஸில் அதிக சேவைகளை இயக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், டிசம்பர் 1 முதல் அதன் கட்டணத்தை நான்கு முதல் ஆறு மடங் குவரை உயர்த்தியுள்ளது. தற் போதைய ரூ. 13,500 கட்டணம் இனி ரூ.78 ஆயிரமாக இருக்கும். கேர ளத்தின் நான்கு விமான நிலை யங்களில் இருந்து அய்க்கிய அரபு எமிரேட் ஸுக்கு விமா னத்தில் செல்ல ரூ.60 ஆயிரம் முதல் ரூ.78 ஆயிரம் வரை செலவாகும்.
துபாயில் இருந்து கண்ணூர், கரிப்பூர், நெடும்பாசேரி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்க ளுக்கு டிசம்பர் 8 முதல் 22 வரை ஏர் இந்தியா நிறுவனம் ரூ.32,880 முதல் ரூ.42,617 வரை கட்டணம் வசூலிக்கும். தற்போதைய கட்டணம் ரூ.12 ஆயிரம். டிசம்பர் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் ஷார்ஜா மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் இருந்து கேரளத்துக்கு ரூ.31,907 முதல் ரூ.42,117 வரை கட்டணம் நிர்ணயிக்கப்ப டுள்ளது.
கண்ணூர், கரிப்பூர், நெடும்பாசேரி விமான நிலை யங்களில் இருந்து துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய விமான நிலையங் களுக்கு டிசம்பர் 26 முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை பயணம் செய்ய விரும் பினால், கட்ட ணம் ரூ.35,555 முதல் ரூ.44,037. தற்போதைய ரூ.12 ஆயிரம் கட்டணத்தில் இருந்து இந்த உயர்வு. விடு முறையை சாத கமாக பயன்படுத்தி பல ஆண் டுகளாக நடக்கும் விமான கட்டணக் கொள்ளைக்கு எதி ராக போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.