சென்னை, மே 13– குரூப் 2ஏ பதவிக்கான சான்றிதழ் சரி பார்ப்பு, கலந்தாய்வு வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2ஏ(நேர்முகத்தேர்வு அல் லாத பதவி) பணியில் காலிப்பணியிடத்தை நிரப்பும் பொருட்டு முதன்மை எழுத்துத்தேர்வை
கடந்த 25.2.2023 அன்று நடத் தியது.
முதன்மை எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப் பெண் மற்றும் தரவரிசை விவரம் 8.4.2024 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப் பட்டது.
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான(நேர்முக எழுத் தர் மற்றும் சுருக்கெழுத்து தட் டச்சர் பதவிகள் தவிர) மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற் றும் கலந்தாய்வு வருகிற 15ஆம் தேதி முதல் 20.6.2024 வரை சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக் கப்படும் விண்ணப்பதாரின் மதிப்பெண், ஒட்டுமொத்த தர வரிசை எண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்க ளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தற்காலிக தெரி வாளர்களின் பட்டியல் தேர் வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங் கிய அழைப்பாணையினை விண்ணப்பதாரர்கள் தேர்வா ணைய இணையதளமான www.tnpsc.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக் கப்படும் விண்ணப்பதாரர்க ளுக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப் படும்.
மூலச்சான்றிதழ்கள் சரி பார்ப்பு, கலந்தாய்விற்கு பங் கேற்க அழைக்கப்பட்ட விண் ணப்பதாரர், எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை இட ஒதுக்கீட்டு விதிகள், விண்ணப் பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்க ளுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.
எனவே, சான்றிதழ் சரிபார்ப் பிற்கு அழைக்கப்படும் அனை வரும் கலந்தாய்வுக்கு அனுமதிக் கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய் விற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்து கொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட் டாது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது