சரத்பவார் குற்றச்சாட்டு!
மும்பை,மே 13- பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே அச்சுறுத் தலாக உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விமர்சித்துள்ளார்.
இது குறித்து மும்பையில் செய்தியாளர் களிடம் பேசிய சரத்பவார்,
பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்காத அரசியல் கட்சிகளை உடைப்பது பிரதமர் மோடியின் செயலாக உள்ளதாகவும், பிரதமர் மோடி நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளதாகவும் விமர்சித்தார்.
ஜனநாயக மாண்புகளை மதிக்காதவர் களுடன் தான் எப்போதும் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பியதில்லை என்று அவர் தெரிவித்தார்.
டில்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் மேனாள் முதல மைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரை கைது செய்தது ஒன்றிய அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் உத்தரவு இல்லாமல் சாத்தியமாகி இருக்காது. பிரதமரின் இந்த நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு அவர் எதிரானவர் என்பதற்கான சான்றுகள் என்று சரத்பவார் தெரிவித்தார்.